திருவாரூரில் திராவிட மாணவர் கழகம் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 31, 2022

திருவாரூரில் திராவிட மாணவர் கழகம் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

 மத்தியப் பல்கலைக்கழகங்களில் கட்டாய நுழைவுத் தேர்வா?

முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களை பல்கலைக்கழக மானியக் குழு தான் தேர்வு செய்வதா?

திருவாரூர், மார்ச் 31 இந்தியா முழுவதும் உள்ள 45 மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கு கட்டாய பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பைக் கண்டித்தும், மாநில பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களின் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களையும் பல்கலைக்கழக மானியக் குழு தான் நுழைவுத் தேர்வு நடத்தித் தேர்வு செய்யும் என்ற அறிவிப்பைக் கண்டித்தும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ஆணைக்கிணங்க திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் திருவாரூர் பழைய பேருந்து நிலை யத்தையொட்டி அமைந்துள்ள தந்தை பெரியார் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் இன்று (31.3.2022) நடைபெற்றது.

திருவாரூர் நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதி யெங்கும் கழகக் கொடிகள் பெருமளவில் கட்டப்பட் டிருந்தது.

ஆர்ப்பாட்டத் தொடக்க உரை

திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார் ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை யேற்றார். மாநில அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் வரவேற்புரையாற்றியதைத் தொடர்ந்து, மாநில துணைச் செயலாளரும் ஆய்வு மாணவருமான .அஜிதன் தொடக்கவுரையாற்றினார். ஒன்றிய அரசு கல்வித் துறையில் நிகழ்த்திவரும் தொடர் தாக்குதல்களை எடுத்துக் காட்டிய அவர், நெட் தேர்வு கூடுதல் தேர்வாகத் தொடங்கபட்டு இன்று கட்டாயத் தேர்வாக மாறியி ருப்பதை எடுத்துக் காட்டினார். பள்ளிக் கல்வி தொடங்கி ஆராய்ச்சிக் கல்வி வரை எளிய மக்களை உள்ளே நுழையவிடாமல் தடுக்க ஒன்றிய பா... அரசு,

ஆர்.எஸ்.எஸ்.சின் கல்வித் திட்டத்தைத் தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரில் திணிப்பதை எடுத்துக் கூறினார்.

திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் நீட் எதிர்ப்பு, தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்புக்கான பயணத்தை வெற்றிகரமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான தொடக்கமாக இந்த ஆர்ப்பாட்டம் அமைந்திருப்பதாகத் தெரிவித்தனர். குறுகிய காலத்தில் ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாக மேற் கொண்ட திராவிட மாணவர் கழகத் தோழர்களுக்கும்,  

அதற்கு ஒத்துழைத்த திராவிடர் கழகத் தோழர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

தலைமையுரை

ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமையேற்ற திராவிட மாணவர் கழக மாநிலச் செயலா ளர் .பிரின்சு என்னாரெசு பெரியார் தனது தலைமையுரையில், “மத்தியப் பல்கலைக்கழகங்கள் அனைத்துக்கும் பொது நுழைவுத் தேர்வு நடத்துவது ஒடுக்கப்பட்ட, ஏழை, எளிய மாணவர் களின் கல்வியைப் பாதிக்கும். மேலும் இதை விரிவுபடுத்தி அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும் திணிக்கும் நோக்கம் ஒன்றிய அரசுக்கு இருக்கிறது. மருத்துவக் கல்லூரிக்கு நீட், மேற்படிப்பு களுக்கு கேட், பொறியியலுக்கு ஜே.., இப்போது கலை அறிவியல் கல்லூரிகளுக் கும் கியூட் நுழைவுத் தேர்வு என பள்ளிக் கல்வியைத் திணித்து, அனைத்தையும் கோச்சிங் செண்டர்களின் கொள்ளைக்கு வழிவகுத்துக் கொடுப்பதா?” என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், “மக்களின் வரிப்பணத்தில் கோடிக்கணக் கான ரூபாய்களில் உருவாக்கப்பட்ட மத் தியப் பல்கலைக்கழகங்களில் தமிழ்நாட் டில் ஒரு பல்கலைக்கழகம் உருவாக்க இந்தியா சுதந்திரம் பெற்று ஏறத்தாழ 60 ஆண்டுகள் ஆகின. முத்தமிழறிஞர் கலைஞர் முயற்சியால் உருவாக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்திலும் இன்று பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் படிப்பதற்கான வாய்ப்பைத் தட்டிப் பறிக்க ஒன்றிய அரசு சதித்திட்டம் தீட்டியிருக் கிறது. தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்து அனைத்து நிலைகளிலும் கொடூ ரமாகத் தலையெடுத்திருக்கிறது.

கல்வியை அனைவருக்கும் கொண்டு செல்வதற்காக இலவசமாக அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்து, கல்வி யைப் பரவலாக்கி தமிழர்களை வெற்றியா ளர்களாக உருவாக்கி உலகெங்கும் உலவ விட்டுள்ள திராவிட மாடலைத் தகர்த்து, மீண்டும் ஆரிய அக்கிரகார ஆதிக்கத் தைக் கொண்டு வருவதற்காகவே இத்த கைய நுழைவுத் தேர்வுகள், முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களை யூஜி.சி. தேர்வு செய்யும் முறை, தேசியக் கல்விக் கொள்கை அனைத்தும் பயன்படுத்தப்படு கின்றன. இவற்றை ஒழித்துக் கட்ட திரு வாரூரில் தொடங்கும் இந்தப் போராட்டத் தில் அனைத்து மாணவர் அமைப்புகளும் விரைவில் இணைவார்கள். இதை இந்தியாவெங்கும் முன்னெடுத்து, இந்தச் சதியை முறியடித்து, அதன் வெற்றி விழாவை இதே திருவாரூர் மண்ணில் தமிழர் தலைவர் தலைமையில் நடத்து வோம்என்று சூளுரைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் தனியார் கல்வி நிறுவனத்தில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமைக்காக அவமரியாதைக்கு உள்ளாகி உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி சுபாஷினி மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்ட தோடு, இத்தகைய நிலைக்கு எதிராகப் போராடி வெற்றிபெற மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்து மாநில திராவிட மாண வர் கழகத் துணைச் செயலாளர் நாத்திக.பொன்முடி, மக்கள் சக்திக்கு முன் மகுடங் கள் வளைந்து தான் ஆக வேண்டும் என்ற தமிழர் தலைவரின் அறிக்கையைச் சுட்டிக்காட்டி அனைவருக்கும் நன்றி கூறினார்.

முன்னதாக தந்தை பெரியார் சிலைக்கு .பிரின்சு என்னாரெசு பெரியார் தலை மையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடு துறை, கும்பகோணம், மன்னார்குடி, தஞ்சாவூர் மாவட்டங்களிலிருந்தும் தோழர் கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளை திருவாரூர் மண்டல மாணவர் கழகச் செயலாளர் ஆர்.ஜெ.உமாநாத், தஞ்சை மண்டல மாணவர் கழகச் செயலாளர் .சற்குணம், திருவாரூர் மாவட்டத் தலைவர் மோகன், செயலாளர் வீர.கோவிந்தராஜ், மண்டலச் செயலாளர் திருத்துறைப்பூண்டி கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.எஸ்.எம்.அருண் காந்தி உள்ளிட்டோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.

கலந்து கொண்டவர்கள்

மாவட்டப் பொறுப்பாளர்கள் மயிலாடு துறை மாவட்டத் தலைவர் குணசேகரன், செயலாளர் கி.தளபதிராஜ், நாகை மாவட் டத் தலைவர் நெப்போலியன், செயலாளர் பூபேஷ் குப்தா, திருவாருர் நாகை காரைக் கால், குடந்தை, தஞ்சாவூர் மாணவரணித் தோழர்கள் தீனதயாளன், கிரிராஜன், வாசு தேவன், தினேஷ்குமார், மோகன்ராஜ், சசிகுமார், புலமன், வீரன், கிரிதரன், விடு தலை அரசி, சஞ்சித், கபிலன், பிரவீன் குமார், லெனின் கலை, அருண்குமார், அறிவுக்கரசு, உமாசங்கர், இளமாறன், திராவிடர் கழக தோழர்கள் விஜயகுமார், முனியாண்டி, சுரேஷ் முரளி, சிவகுமார், குருமூர்த்தி, முருகானந்தம், பொன் செல் வராஜ் மற்றும் மாவட்ட, மண்டலப் பொறுப் பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

No comments:

Post a Comment