அரசைப் பொறுத்தவரை தருமபுரி மாவட்டம் வறட்சி மாவட்டம்! நம்மைப் பொறுத்த அளவில் அது புரட்சி மாவட்டம் தருமபுரியில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் மன்ற கட்டடத்தை திறந்து வைத்து உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களை பாராட்டி தமிழர் தலைவர் உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 23, 2022

அரசைப் பொறுத்தவரை தருமபுரி மாவட்டம் வறட்சி மாவட்டம்! நம்மைப் பொறுத்த அளவில் அது புரட்சி மாவட்டம் தருமபுரியில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் மன்ற கட்டடத்தை திறந்து வைத்து உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களை பாராட்டி தமிழர் தலைவர் உரை

தருமபுரி, மார்ச் 23 தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் மன்ற கட்டட திறப்பு விழா மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி, பேரூராட்சி மன்ற தேர்தலில் வெற்ற பெற்ற தலைவர், துணைத் தலைவர் மன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு தருமபுரி பெரியார் மனறத்தில் 20.3.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில்மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட கழக தலைவர் மு.பரமசிவம் வரவேற்புரை யாற்றினார். முன்னதாக தந்தை பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் மாலை அணிவித்து, கட்டட திறப்பு விழா கல்வெட்டை திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் மன்ற உறுப்பினர்களுக்கு பயனாடை அணிவித்து பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் .யாழ்திலீபன், மண்டலத் தலைவர் .தமிழ்ச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர்கள் .கதிர், .தீர்த்தகிரி, .மாதன், இரா.வேட் ராயன், மண்டல ஆசிரியரணி அமைப்பாளர் இரா.கிருஷ்ணமூர்த்தி, நகர தலைவர் கரு.பாலன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூரபாண்டியன், மண்டல மாணவர் கழக அமைப்பாளர் .வெற்றி, மாவட்ட இணை செயலாளர் தமிழ் பிரபாகரன், ஒன்றிய தலைவர் .துரைசாமி, ஓசூர் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி இணைப்புரையாற்றினார்.

வருகை தந்த உள்ளாட்சி தலைவர்கள் சார்பில் அவர்களின் வெற்றிக்காக உழைத்த மேனாள் கல்வி அமைச்சர் பி.பழனியப்பன் தமிழர் தலைவருக்கு சிறப்பு செய்து கருத்துரையாற்றினார்.

மாநில திராவிடர் கழக அமைப்பாளர் இரா.குண சேகரன், கழக புரவலர் சி.ஆசைத்தம்பி, சேலம் பொதுக் குழு உறுப்பினர் பழனி புள்ளையண்ணன், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவணன், மாநில கலைத்துறை செயலாளர் மாரி.கருணாநிதி, சேலம் மண்டலத் தலைவர் சிந்தாமணியூர் சுப்பிரமணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் சி.கோவேந்தன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் அரூர் சா.இராஜேந்திரன், கலைமகள் பள்ளி தாளாளர் முனைவர் மு.இராஜேந்திரன், நிர்வாக இயக்குநர் பாரதி, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சுபேதார், ஜமாத் இஸ்லாம் அமைப் பின் நிர்வாகி முகமது அஸ்வாக், இந்திய தேசிய லீக் பொறுப்பாளர் சிக்கந்தர் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியருக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்தனர்.

உள்ளாட்சித் தலைவர்கள்

உள்ளாட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களான தருமபுரி நகராட்சி மன்ற தலைவர் இலட்சுமி நாட்டான் மாது, துணைத் தலைவர் நித்யா, பாப்பிரெட்டிப்பட்டி தலைவர் மா.மாரி, துணைத் தலைவர் வீ.ரவி, பெண் ணாகரம் தலைவர் வீரமணி, துணைத் தலைவர் வள்ளியம்மாள், கடத்தூர் தலைவர் கு.மணி, துணைத் தலைவர் ஜெ.தீர்த்தகிரி, பாப்பாரப்பட்டி தலைவர் பிருந்தா, துணைத் தலைவர் மல்லிகா, பாலக்கோடு தலைவர் பி.கே.முரளி, துணைத் தலைவர் ஹசினா, மாரண்ட அள்ளி தலைவர் வெங்கடேசன், துணைத் தலைவர் கார்த்திக், கம்பைநல்லூர் மதிவாணன் உள்பட உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சால்வை அணிவித்து சிறப்பு செய்து பேசியதாவது:

தமிழர் தலைவர் உரை

சரித்திர நாயகர் தொடர் வெற்றிக்கு உரியவரான நமது முதலமைச்சர் தளபதியின் சிறப்புக்குரிய ஊராட்சி, உள்ளாட்சி தேர்தலில் வெற்றிக்காக உழைத்த அத்துணை பேருக்கும் தாய்க் கழகத்தின் சார்பாக வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தருமபுரி மாவட்ட திராவிடர் கழகத்தை பொறுத்தவரை 2ஆவது தாய் வீடு மாதிரி. அரசு கணக்கில் தருமபுரி மாவட்டம் வறட்சி மாவட்டம், நம்மை பொறுத்தவரை புரட்சி மாவட்டம், தருமபுரி பல வகைகளில் சிறப்பு பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் தந்தை பெரியாருக்கு தருமபுரியில் வைக்கப்பட்டதுதான் இரண்டாவது சிலையாகும். அண்ணா அவர்கள் திறப்பதாக இருந்தது. ஆனால் அவர் மறைவுற்ற காரணத்தால் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் அனைத்து பகுதிக்கும் சென்றிருக்கிறேன். அனைத்து பகுதிகளும் தெரியும். இந்த கட்டடத்திற்கு பல வரலாறுகள் உள்ளன. உச்சநீதிமன்றம் வரை சென்று கட்டப்பட்ட கட்டடம் இது. உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக பெண்களுக்கு 50 சதவிகித இடமளித்து நமது முதல்வர் செய்ததினால் இவ்வளவு மகளிர் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்.

வெற்றி பெற்ற அனைவரும் அம்மக்களுக்கு சிறப்பாக செய்யுங்கள், செயல்படுங்கள். ஊரை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களை மீண்டும் அந்த அந்த பகுதிகளுக்கு வந்து பாராட்டி வாழ்த்துகிறேன் என தனது உரையில் குறிப்பிட்டார்.

பங்கேற்றோர்

நிகழ்ச்சியில் .சின்னராஜ்-சுதாமணி, சி.காமராஜ், கு.சரவணன், கே.ஆர்.குமார், .சமரசம், .நடராஜன், தாழை பாண்டியன், இனமுரசு கோபால், பிரதாப், பெ.கோவிந்தராஜ், மா.சென்றாயன், அழகேசன், சோழவேந்தன், அர்ச்சுனன், பூபதிராஜா, மா.சுந்தரம், சின்னசாமி, சிசுபாலன் ஓசூர் கண்மணி, மேனாள் மாவட்ட தலைவர் மதிமணியன், இளங்கோ, தனசேகரன், மு.மனோகரன், பையூர் தமிழ்ச்செல்வி, கடமடை சுசிலா, திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் வி.ஜி.இளங்கோ, மாநில மகளிரணி அமைப்பாளர் அகிலா, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர் .கவிதா, சி.அருள், கிருட்டிணகிரி மாவட்ட செயலாளர் மாணிக்கம், நகரத் தலைவர் தங்கராசு, ஒசூர் செல்வி, செல்வம், பையூர் பெரியார் செல்வம், .துரைசாமி, சங்கீதா, வண்டி ஆறுமுகம், இந்திராகாந்தி மற்றும் கிருஷ்ணகிரி, சேலம், ஓசூர், திருப்பத்தூர் பகுதிகளிலிருந்து அதிக அளவில் தோழர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி மாநாடு போல சிறப்பாக அமைந்திருந்தது.

தருமபுரி பெரியார் மன்றத்தில் உள்ள கொடியை தமிழர் தலைவர் ஏற்றி வைத்து அன்னை மணியம் மையார் படத்திற்கு மாலை அணிவித்தார். ஆசிரியர் வருகையையொட்டி தருமபுரி நகரில் கழகக்கொடி தோரணங்கள், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு விழாக் கோலம் பூண்டது.

தொகுப்பு:

வேப்பிலைப்பட்டி தமிழ்ச்செல்வன்

No comments:

Post a Comment