ரஷ்யாவின் போர் அச்சுறுத்தலுக்கு எதிர்ப்பு உக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் பேரணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 15, 2022

ரஷ்யாவின் போர் அச்சுறுத்தலுக்கு எதிர்ப்பு உக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் பேரணி

கைவ்,  பிப். 15- ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல் லைப்பிரச்சினை உள்ளது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014ஆம் ஆண்டு ரஷியா கைப்பற்றி யது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடை யான மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் சில அய்ரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து வருகிறது. இத னால், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க லாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற் கும் ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருவதால் போர் பதற்றம் அதிகரித்து வரு கிறது.

உக்ரைன் மீது முழு மையாக படையெடுப்ப தற்கு தேவையான ராணுவ படைகளில் 70 சதவீதத்தை ரஷ்யா திரட்டியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் உக்ரைன் மீது படையெடுக்கும் எண் ணம் இல்லை என ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது.

இந்த நிலையில் ரஷ் யாவின் அச்சுறுத்தலுக்கு எதிராக உக்ரைனில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணி நடத்தி தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். ரஷ்யாவின் தலைநகர் கைவ் பகுதியில் இந்த பேரணி நடைபெற்றது. இதில் மாணவர்கள், பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். போர் எதற்கும் தீர்வா காது என்றும் ரஷ்யாவின் ஆதிக்கத்தை கடுமையாக எதிர்ப்போம் என்றும் பதாகைகளை ஏந்தியபடி  பேரணியில் ஈடுபட்டவர் கள் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர் என் பது குறிப்பிடத்தக்கது..

No comments:

Post a Comment