ஜெர்மனி அதிபராக பிரான்க் வால்டர் ஸ்டீன்மையர் மீண்டும் தேர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 15, 2022

ஜெர்மனி அதிபராக பிரான்க் வால்டர் ஸ்டீன்மையர் மீண்டும் தேர்வு

பெர்லின், பிப். 15-- ஜெர்மனி யின் நாடாளுமன்றத்தில் அதிபரை தேர்வு செய்யும் சிறப்பு கூட்டத் தொடர் நேற்று (14.2.2022) நடை பெற்றது.  இதில் கீழவை மற்றும் 16 மாகாணங் களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

இதில் பெரும்பான் மையான வாக்குகள் பெற்று பிரான்க் வால்டர் ஸ்டீன்மையர்  2ஆவது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டு உள் ளார். அதிபராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் பிரான்க் ஸ்டீன்மையர் உரையாற்றினார்அப்போது  அவர் கூறியதாவது,

ஜனநாயகத்திற்காக போராடுபவர்களுக்கு பக்கத்தில் நான் இருப் பேன். ரஷ்யா-உக்ரைன் எல்லையில் படைகளை குவித்து வருவது அந்த நாட்டுக்கு ஆபத்து.

அங்கு உள்ள மக்கள் அச்சமின்றி வாழ்வதற் கான உரிமை உள்ளது. அதனை அழிக்க எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment