சென்னை, பிப். 26- புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் டாக்டர் ஜமால் ஏ.கான் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்திவருகிறார். இவர் டெண்ட்ரிக் செல் அடிப்படையிலான இம்யூனோதெரபி சிகிச்சை அளிப்பதில் முன்னோடி நிபுணர். முற்றிய நிலையில் புற்றுநோயைக் கொண்ட நோயாளிகளின் வாழ்க்கைத்தரத்தை அவருடைய சிகிச்சைகள் மேம்படுத்தியுள்ளன.
இது குறித்து, உலகப் புகழ்பெற்ற புற்றுநோய் இம்யூனோதெரபி நிபுணர் டாக்டர் ஜமால் ஏ. கான் பேசுகையில், நானும் எனது குழுவும் அளித்துவரும் டெண்ட்ரிக் செல் அடிப்படையிலான இம்யூனோதெரபி சிகிச்சை மூலம் உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான புற்றுநோயாளிகள் குணமடைந்திருப்பது கண்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன். புலந்த்ஹெகரைச் சேர்ந்த சாய்மா என்கிற இந்த இளம்பெண் எங்களுடைய இம்யூனோதெரபி மூலம் மூளைப் புற்றுநோயை வென்றிருக்கிறார். இதுபோன்ற நிகழ்வுகளில், சிகிச்சை நடைமுறையின் ஒரு பகுதியாக, நோயாளியின் ரத்தத்தை எடுத்து, அதில் ரத்த வெள்ளையணுக்களைப் பிரித்தெடுப்போம். பிறகு, ஆய்வகத்தில் டெண்ட்ரிக் செல் எனப்படும் இம்யூனோ செல்களை பெருகச் செய்வோம். இந்த இம்யூனோ செல்களை நோயாளிக்குச் செலுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment