கல்லூரி மாணவி கடத்தல் வழக்கில் சிக்கிய பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 15, 2022

கல்லூரி மாணவி கடத்தல் வழக்கில் சிக்கிய பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்

பாட்னா பிப். 15- பிகாரில் கல்லூரி மாணவி கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் பாஜக சட்டமன்ற உறுப் பினர் வினய் பிஹாரி மீது பாட்னா காவல்துறை வழக்குப் பதிவு செய் துள்ளது

பாட்னாவின் பூத்நாத் சாலையில் அமைந்துள்ள முற்போக்குக் காலனியில் வசிப்பவர் ரிசிமா ராஜ். அவர் பிப்ரவரி 9 ஆம் தேதி காலை 9 மணிக்கு வணிகவியல் கல்லூரிக்குச் சென்றிருந்தார். மதியம் 2 மணிய ளவில் திரும்பி வர வேண்டிய அவர் திரும்பி வரவில்லை.

அவரது தாயார் ரேகா குமாரி, ரிசிமாவை அலைபேசியில் தொடர்பு  கொண்டார். அப்போது ரிசிமாவின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டு  இருந்தது. இந்நிலை யில், 3.10 மணிக்கு ரிசிமாவின் அலைபேசியில் இருந்து ரேகாவுக்கு குறுஞ்செய்தி வந்தது. அதில் 7304210830 என்ற எண்ணில் தொடர்பு கொள் ளுமாறு தெரிவிக் கப்பட்டு இருந்தது. அந்த எண்ணைத் தொடர்பு கொண்ட போது, அதை பாஜக சட்டமன்ற உறுப்பினர் வினய் பிகாரி பேசியுள்ளார்.

அவர் பேசும் போது தனது மருமகனுக்கு அந்தப்பெண்ணை பிடித்துவிட்டது. ஆகவே அவளை தூக்கிவந்துவிட்டோம் என்றும் இது குறித்து காவல்துறையினரிடம்  புகார் கொடுத்தால் எந்தப் பயனும் இல்லை என்றும் மிரட்டியுள்ளார்.

 இதனை அடுத்து காணாமல் போன தனது மகளை மீட்டுத் தருமாறு ரேகா காவல்துறையின ரிடம் புகார் தெரிவித்தார். அந்தப் புகாரில் சட்டமன்ற உறுப்பினர் பேசியதையும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, ரேகா கொடுத்த புகாரின் பேரில், வினய் பிகாரி மீது பாட்னா காவல்துறையினர் வழக் குப் பதிவு செய்துள்ளனர். 

பிகார் லாஹரியா சட்டமன்றத் தொகுதி யின் பாஜக சட்டமன்ற உறுப்பி னரான வினய் பிகாரி இந்த குற்றச் சாட்டை அவர் மறுத்துள் ளார்.

No comments:

Post a Comment