ரஷ்ய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் விரட்டியடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 15, 2022

ரஷ்ய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் விரட்டியடிப்பு

மாஸ்கோபிப். 15- உக்ரைன் விவகாரத்தில் அமெ ரிக்கா-ரஷ்யா இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், அமெரிக் காவின் நீர் மூழ்கி கப்பல் தங்கள் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்ததாகவும், அதனை தங்கள் நாட்டு வீரர்கள் விரட்டியடித்த தாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து ரஷ்ய ராணுவ அமைச்சகம் வெளிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

பசிபிக் கடலில் உள்ள குரில் தீவுக்கு அருகே ரஷ் யாவின்மார்ஷல் ஷபோஷ் னிகோவ்போர் கப்பல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, ரஷ்ய கடல் பகு தியில் அமெரிக்க கடற் படையின் வர்ஜினியா வகை நீர்மூழ்கி கப்பல் அத்துமீறி நுழைந்ததை ரஷ்ய கப்பல் கண்டறிந் தது.

அதனை தொடர்ந்து, கடலின் மேற்பரப்புக்கு வரும்படி விடுத்த கோரிக் கையை அமெரிக்க கப்பல் நிராகரித்ததை தொடர்ந்து, ரஷ்ய போர்க்கப்பலில் இருந்த வீரர்கள் அமெ ரிக்க கப்பலை விரட்டிய டிப்பதற்கான நடவடிக் கைகளை எடுத்தனர். அதன் பின்னர் அமெரிக்க கப்பல் முழு வேகத்தில் அங்கிருந்து வெளியேறி யது. இந்த சம்பவம் தொடர் பாக ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இருக்கும் அமெரிக்க ராணுவ அதி காரிக்கு சம்மன் அனுப்பப் பட்டது.

இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே ரஷ்ய கடல் பகுதியில் அமெ ரிக்க நீர்மூழ்கி கப்பல் அத்துமீறி நுழைந்ததாக கூறப்பட்ட குற்றச் சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது.

No comments:

Post a Comment