சடங்குகள் செய்யப் போய்... இந்தோனேசியாவில் அலையில் சிக்கி 11 பேர் பலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 15, 2022

சடங்குகள் செய்யப் போய்... இந்தோனேசியாவில் அலையில் சிக்கி 11 பேர் பலி

ஜகார்த்தாபிப். 15- இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள ஜெம்பர் மாவட்டத்தில் பயங்கன் என்கிற கடற்கரை உள்ளது. இந்த கடற்கரையில் நேற்று (14.2.2022) பாரம்பரிய நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது.

இதையொட்டி 20-க்கும் அதிகமானோர் கடற்கரை யில் திரண்டு சடங்குகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது கடலில் திடீரென எழுந்த பேரலை கரையில் நின்று கொண்டிருந்த 23 பேரை உள்ளே இழுத்து சென்றது.

இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் தேசிய பேரிடர் மீட்புப் குழுவினர் உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று தீவிர மீட்புப் பணியில் இறங்கினர்.

எனினும் அதற்குள் 12 பேர் தாமாக நீந்தி கரை சேர்ந்தனர். காணாமல் போன 11 பேரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். எனினும் பல மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் அவர்கள் 11 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர். பாரம்பரிய சடங்கு  நிகழ்ச்சிகள் என நடத்தும் போது பேரலையில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது இந்தோனேசியாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் பேருந்து வெடித்து ஒருவர் பலி: 42 பேர் காயம்

பெய்ஜிங்,  பிப். 15- வடகிழக்கு சீனாவில் பேருந்து ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 42 பேர் காயமடைந்தனர்.

லியோனிங் மாகாணத்தில் ஷென்யாங் நகரில் ஒரு பேருந்து திடீரென வெடித்துள்ளது. வெடிப்பு ஏற்பட்ட போது பெரும் சத்தம் கேட்டதாகவும், ஆனால் பேருந்து தீப்பிடிக்கவில்லை என்றும் நேரில் பார்த்தவர்கள் கூறி யுள்ளனர். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 42 பேர் காயமடைந்துள்ளனர்.

பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்த நிலையில் பெரும் குப்பைச் சிதறலுடன் பேருந்து சாலை யோரத்தில் நிற்கும் காணொலிக் காட்சிகள் வெளியாகி உள்ளன.

பேருந்து வெடிப்பிற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment