சென்னை மெரினா கடற்கரையில் அலங்கார ஊர்திகளை பார்வையிட்ட மாணவர்களிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 22, 2022

சென்னை மெரினா கடற்கரையில் அலங்கார ஊர்திகளை பார்வையிட்ட மாணவர்களிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்

சென்னை, பிப்.22 சென்னை மெரினா கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ள அலங்கார ஊர்திகளை பார்வையிட்ட மாணவர்களிடம், முதலமைச்சர் மு..ஸ்டாலின் கலந்துரையாடினார்.

டில்லியில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில், சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை பறைசாற்றும் தமிழ்நாடு அரசின் அலங் கார ஊர்திகள் பங்கேற்க அனுமதிக்கப் படவில்லை. இதையடுத்து சென்னை யில் நடந்த குடியரசு தின விழாவில் அந்த ஊர்திகள் மிடுக்குடன் பங்கேற் றன. பின்னர் இந்த அலங்கார ஊர்திகள் சென்னையில் இருந்து புறப்பட்டு, தமிழ்நாடும் முழுவதும் வீதி உலா சென்றது.

மாநிலம் முழுவதும் சென்ற சுதந்திர போராட்ட வீரர்களின் அலங்கார ஊர் திகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. நகர் வலம் சென்ற அந்த அலங்கார ஊர்திகள் மீண்டும் சென்னை வந்தடைந்துள்ளன. விடுதலைப்போரும் தமிழ்நாடும்என்ற இந்த 3 அலங்கார ஊர்திகளும் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு வசதியாக சென்னை மெரினா கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு..ஸ்டாலின் நேற்று (21.2.2022) தனது அலுவல் பணிகளை முடித்துவிட்டு, வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென அலங்கார ஊர்திகள் நிறுத் தப்பட்ட இடத்துக்குச் சென்றார். அங்கு திருவல்லிக்கேணி ரேக்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி, .வி.. மெட்ரிகுலேசன் பள்ளி, என்.கே.டி. தேசிய ஆண்கள் பள்ளி, மயிலாப்பூர் பி.எஸ்.பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவ -மாணவிகள் அலங்கார ஊர்திகளை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்த  வர்கள் மு..ஸ்டாலினை பார்த்து வியப்படைந்தனர்.

அவர்களிடம் மு..ஸ்டாலின் எந்த பள்ளியில் படிக்கிறீர்கள்? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு கலந்துரையாடினார். அலங்கார ஊர்தி களை பார்த்த மாணவ-மாணவிகளை ஊக்கப்படுத்திய மு..ஸ்டாலின், அவர் களோடு செல்பிஎடுத்துக் கொண்டார். மேலும் தன்னுடைய அலைபேசியில் காட்சி பதிவையும் எடுத்தார். அப்போது மாணவ _ -மாணவிகள் உற்சாக மிகுதியில் ஆர்ப்பரித்தனர்.

இதையடுத்து மாணவிகளிடம், இந்த அலங்கார ஊர்திகள் எதற்காக இங்கு நிற்கிறது தெரியுமா?’ என்று கேட்டார்.

அதற்கு மாணவிகள் பதில் சொல் லாமல் தயங்கி நிற்க, குடியரசு நாளன்றுடில்லியில் இந்த வண்டியை வரக் கூடாது என்று சொல்லிட்டாங்க. அதனால தமிழ்நாடு முழுவதும் சுற்றிக் கொண்டு வந்திருக்கிறோம். புரிகிறதா?” என்று மு..ஸ்டாலின் கூறினார். அலங்கார ஊர்திகளை பார்த்துக் கொண்டிருந்தவர்களோடு, மு..ஸ்டாலின் கலந்துரையாடிய போது, இந்திய விடுதலை போரில் ஆங் கிலேயர்களை தீரமுடன் எதிர்கொண்ட தமிழ்நாடு சுதந்திர போராட்ட வீரர் களின் வரலாற்றை பற்றி அறிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளதுஎன்று மாணவர்கள் தெரிவித்தனர்.

பள்ளி மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, அரசு வகுத்துள்ள கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிக்கு சென்று நன்றாக படிக்க வேண்டும்என்று மு..ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

அப்போது, பொதுப் பணித்துறை அமைச்சர் ..வேலு, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் வீ..ஜெயசீலன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment