விசத்தை விதைக்கும் பா.ஜ.க. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 15, 2022

விசத்தை விதைக்கும் பா.ஜ.க.

கருநாடகத்தில் ஹிஜாப் அணிந்துவரத் தடை என்று, கருநாகமாக விசத்தை உமிழ்ந் திருக்கிறது பா. . .

ஹிஜாப் என்பது முஸ்லீம்களின் உரிமை, காவித்துண்டு அணிந்து வருவது என்பது போட்டியாக அல்ல, தம்மைத் தவிர எவருக்கும் உரிமை இல்லை என்ற ஆணவத்தின் வெளிப் பாடு. மதத்தின் மீது பிடித்த மதம்.

ஹிஜாப் அணியக்கூடாது என மதவெறி யோடு செயல்படும் பா. . . வினரே ,அய்யப்ப, முருக  பக்தர்கள் என்று காவி, கருப்பு உடை தரித்து கல்வி நிலையங்கள், பணிக்கு வருகி றார்களே அவர்களுக்கு தடை விதிக்க முடியுமா?

ஒரே நாடு, ஒரே தேசம் என வாய் கிழிய பேசும் பா. . . வே, முதலில் இந்து மதத்தில் ஒற்றுமையை கொண்டுவாருங்கள். ஜாதிக் கொரு கடவுள், ஜாதிக்கொரு தாலி, நெற்றியில் விபூதி, பட்டை, 'யு' நாமம், 'வி' நாமம்  என எண்ணற்ற வேறுபாடுகள். ஒரு மதத்திற் குள்ளேயே இவ்வளவு வேறுபாடுகள்.

இந்துக்கள் அனைவரும் ஒன்றே ஜாதிகள் இல்லை, உயர்வு தாழ்வு வேறுபாடுகள் இல்லை, ஜாதி பார்த்து திருமணம் செய்ய தடை என்று சட்டம் கொண்டுவரமுடியுமா பா. . . அரசால்.

இந்து, முஸ்லிம், கிறித்தவ மதத்தை உணர்த் தும் வகையில் மதிக்கப்படும் தேசியக்கொடிக்கு பதிலாக காவிக்கொடியை ஏற்றுகிறார்கள் என் றால் என்னே ஒரு ஆணவத்தின் வெளிப்பாடு.

இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பது வலுவாக உள்ளது. இதில் பா. . , இந்து மதத் திற்கு மட்டுமே முன்னுரிமை வழங்குவது என்பது தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக் கும் செயல். இப்படி மாற்று மதத்தினரை ஒதுக்கி இந்து மதத்தை உயர்த்தி பிடிப்பதை இந்து மத மக்களே ஏற்க மாட்டார்கள். இந்து, முஸ்லிம், கிறித்துவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து , இனிப்பு பண்டங்கள், பிரியாணி, கேக் வகைகளை பரிமாறிக்கொண்டு மகிழ்ந்து வரும் வேளையில் பா... வினர் விசத்தை விதைப்பது  நாட்டிற்கே ஆபத்து.

அனைத்து ஜாதி, மதத்தினரின் குருதியால் தான் இந்தியா விடுதலை பெற்றது. அந்த ஒற்றுமை உறுதியான குருதிக்குள் வேற்றுமை என்ற விசத்தை பா. . . ஏற்ற வேண்டாம்.

தான்தோன்றித்தனமாக செயல்படும்

பா...வே, இது ஒரு மதத்திற்கு மட்டும் உரிய நாடல்ல, அரசமைப்பு சட்டம், நீதிமன்றம், ஆட்சியைதேர்வு செய்யும்மக்கள் என கட்டுக் கோப்பாக உள்ளது. இதை மீறி செயல்படுவது என்பது இந்தியாவையும், அதன் நெறிமுறை களை ஏற்க மறுத்து, அவமானப்படுத்துவதற்கு ஒப்பாகும்.

மு. சு. அன்புமணி, மதுரை.

No comments:

Post a Comment