ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இதுகுறித்து ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்தின் விழா ஆண்டுதோறும் பிப்ரவரி,மார்ச் மாதங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பங் கேற்க விரும்பும் தமிழ்நாடு மீனவர்களின் பாதுகாப்பான பயணத்துக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.
இந்நிலையில், பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த ஆண்டு திருவிழாவில் தமிழ்நாட்டு மீனவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக எனது கவனத்துக்கு வந்துள்ளது.
தமிழ்நாட்டு மீனவர்கள் கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்துடன் பல ஆண்டுகளாக ஆன்மிக மற்றும் உணர்வுப்பூர்வமான தொடர்பு கொண்டுள்ளனர். கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இலங்கை அதிகாரிகளால் அனுமதிமறுக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டு மீனவர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் புனித அந்தோணியார் ஆண்டு பெருவிழாவில் தமிழ்நாட்டு மீனவர்கள், தடையின்றி பங்கேற்பதை உறுதி செய்ய இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். இந்த முயற்சி, இரு நாட்டு மக்களிடையே நல்லுறவைப் பேணு வதை உறுதி செய்யும்.
இவ்வாறு முதலமச்சர் மு.க.ஸ்டாலின்
தெரிவித்துள்ளார்.
இந்தக் கடிதத்தை, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு நேரில் சந்தித்து வழங்கியுள்ளார்.
No comments:
Post a Comment