கடந்த 07.2.2019 அன்று சென்னை, வேப்பேரி, பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை - எழும்பூர் ரயில் நிலையம் இடைப்பட்ட பகுதியில் அன்னை மணியம்மையார் சிலை அருகே கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில், 107 பேர் மனுதர்ம நகலை கொளுத்த முயன்றதாகவும் கழகத் தலை வரோடு பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி, அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்லம், மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் கவிஞர் கண்மதியன் ஆகியோர் மீது எழும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 143, 290, 285 மற்றும் தமிழ்நாடு காவல் சட்டம் பிரிவு 41-இன் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிக்கையினை 14ஆவது எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன் றத்தில் 7(1)(a) குற்றத்திருத்தச் சட்டம் 2005 உடன் சேர்த்து தாக்கல் செய்தார்.
மேற்படி வழக்கு, ரத்து செய்யப்பட வேண்டுமெனவும் புகார் கொடுத்த ஆய்வாளரே விசாரணை அதிகாரியாக விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது செல்லாது என்றும், அமைதியான முறையில் கூட்டம்கூடி எதிர்ப்பை தெரிவிப்பது ஜனநாயக வழிமுறைகளில் ஒன்று என்றும், அரச மைப்பு சட்டத்தில், அதற்கு வழிவகை உண்டு என்றும், காவல்துறையினரைத் தவிர பிற பொதுமக்களின் வாக்குமூலத்தைப் பெறாமல் போடப்பட்ட வழக்கு, நிலைக்கத்தக்கதல்ல என்றும் - எனவே, மேற்படி வழக்கு, ரத்து செய்யப்பட வேண்டுமென்று .வழக் குரைஞர்கள் சு.குமாரதேவன், ஜி.மோகன் மற்றும் பா.திவ்யபாரதி ஆகியோர் மனு தாக்கல் செய்திருந் தனர். மேற்படி வழக்கினை விசாரித்த மாண்புமிகு நீதிபதி எம்.நிர்மல்குமார் அரசுத்தரப்பு வழக்குரைஞரின் வாதத்தை ஏற்றுக்கொள்ளாமல், மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்று வழக்கினை ரத்து செய்தார்.
No comments:
Post a Comment