இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பரவி வரும் கரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசின் கையில் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி செலுத்துதல் மட்டுமே. அதனால், தான் மக்களை இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்தி கொள்ளுமாறு வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பீகார் மாநிலத்தின் மாதேபுரா மாவட்டத்தை சேர்ந்த பிரம்ம தேவ் மண்டல் என்ற 84 வயது முதியவர், தபால் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர்,கடந்த மாதம் பிப்ரவரி 13ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 30ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 11 முறை கரானா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார்.
12 வது முறையாக அவர் தடுப்பூசி போட வரும் போது கையும் களவுமாக பிடிபட்டார். இது குறித்த பேசிய மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள், அவர் 8 முறை ஆதார் எண்ணையும், 3 முறை வாக்காளர் அடையாள எண்ணையும் கொடுத்து, தனது மனைவியின் செல்போன் எண்ணை மாற்றி மாற்றி கொடுத்து தடுப்பூசி போட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், தனக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்ததாக அந்த முதியவர் கூறினார்.
No comments:
Post a Comment