குடியரசு நாள் விழா அணிவகுப்பில் தமிழ்நாட்டின் வாய்ப்பை மறுப்பது ஏமாற்றமளிக்கிறது - உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 18, 2022

குடியரசு நாள் விழா அணிவகுப்பில் தமிழ்நாட்டின் வாய்ப்பை மறுப்பது ஏமாற்றமளிக்கிறது - உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமர் மோடிக்கு கடிதம்

சென்னை,ஜன.18- புதுடில்லியில் 26.1.2022 அன்று நடைபெற உள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கு தலைவர்கள் கடுங்கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து ஒன்றிய அரசின் இம்முடிவு ஏமாற்றமளிக்கிறது என்றும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண் டும் என்றும் குறிப்பிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் அவர் குறிப்பிட் டுள்ளதாவது,

டில்லியில் 26-ஆம் தேதியன்று நடக்க உள்ள குடியரசு தின அணி வகுப்பில் கலந்து கொள்ளும் வாய்ப்பு, தமிழ்நாட்டிடம் இருந்து பறிக்கப்பட்டு இருப்பதை அறிந்து மிகுந்த ஏமாற்றம் அடைந்தேன்.

இந்த ஆண்டு குடியரசுத் தினத்தன்று, இந்தியாவின் சுதந்திர போராட்டம் - 75, சாதனைகள் - 75, நடவடிக்கைகள் - 75, தீர்வுகள் - 75 என்ற மய்யக் கருத்துடன் அலங்கார ஊர்தி அணிவகுப்பை நடத்த ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இதில், தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரர்களை முன்னிறுத்தி, ‘சுதந்திரப் போராட் டத்தில் தமிழ்நாடுஎன்ற மய்யக் கருவுடன் அலங்கார ஊர்தி அணி வகுப்பில் பங்கேற்க தமிழ்நாடு அரசு அதற்கான வடிவமைப்புகளை  சமர்ப்பித்திருந்தது.

இதற்காக நிபுணர் குழுவின் முன்பு மாநில அரசின் பிரதிநிதிகள், அவற்றை தேர்வு செய்வதற்காக 3 முறை ஆஜ ரானார்கள். முதல் கூட்டத்தில், தமிழ் நாட்டின் மய்யக்கருவின் மீது திருப் தியை நிபுணர் குழு தெரிவித்தது.

ஆங்கிலேயர் ஆட்சியில் போராடிய தமிழ்நாடு சுதந்திர போராட்ட வீரர்களின் சித்தரிப்பை ஊர்தியின் முன்பகுதியிலும், கிழக்கிந்திய கம்பெனி காலகட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் சித்தரிப்பை ஊர்தியின் பின்பகுதியிலும் வைத்து வடிவமைக் கப்பட்டு இருந்தது.

அலங்கார ஊர்தியின் முன்புறம் ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1906-ஆம் ஆண்டு சுதேசி கப்பல் கம்பெனியை தொடங்கி, தேசத் துரோக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப் பட்ட, புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரர் ..சிதம்பரனார் பற்றிய சித்தரிப்பு அதில் இடம் பெற்றிருந்தது.

மக்களின் மனதில் சுதந்திர போராட்ட உணர்வுகளை தூண்டி, தட்டி எழுப்பும் வகையில் தேசப்பற்றுப் பாடல்களை எழுதிய மகாகவி சுப்ர மணிய பாரதியார், அந்த வடிவமைப்பில் இடம் பெற்றிருந்தார்.

அலங்கார ஊர்தியின் பின்புறம், குதிரையில் வாளை ஏந்திச் செல்லும் ராணி வேலு நாச்சியார் மற்றும் பெண் படை வீராங்கனைகளின் சிலை வடிவம் இடம் பெற்றுள்ளது. கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக சண்டையிட்ட வீரப் பெண் அவர். சிவகங்கை பகுதியில் 1780-1790-ஆம் ஆண்டுகளில் ராணியாக இருந்தார்.

கிழக்கிந்திய கம்பெனியின் ஆயுதக் கிடங்கை தற்கொலைப்படை தாக் குதலை ஏற்பாடு செய்து அழித்தார். அவருக்கு மருதுபாண்டிய சகோ தரர்கள் பாதுகாப்பாக இருந்து, கிழக் கிந்திய கம்பெனியை போரில் வெற்றி கொள்ளவும், சிவகங்கை சீமையை வென்றெடுக்கவும் உதவி செய்தனர். அவர்களின் படங்களையும் பதாகையில் இணைக்க திட்டமிடப்பட்டு இருந்தது.

தமிழ்நாட்டில் உள்ள பல சுதந்திர போராட்ட வீரர்களில் ..சிதம்பர னார், பாரதியார், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் ஆகியோரும் விளங்குகிறார்கள். எனவே, அவர்களின் சித்தரிப்புகளைக் கொண்ட அலங்கார ஊர்தி விலக்கப்பட்டு இருப்பது, தமிழ்நாடு மக்களின் உணர்வுகளையும், தேசபக்தி உணர்வையும் கடுமையாக காயப்படுத்துவதாக உள்ளது.

ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக, குழு உறுப்பினர்களின் ஆலோசனையின்படி மாற்றி அளிக்கப்பட்ட 7 வடிவமைப்புகளையும், குழு நிராகரித் திருப்பதை ஏற்க முடியாது. 4-ஆவது கூட்டத்திற்கு தமிழ்நாடு அழைக்கப்பட வில்லை என்பதோடு, அணிவகுப்பில் பங்கேற்போர் பட்டியலில் தமிழ்நாடு விடப்பட்டுள்ளது என்று எனக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இது தமிழ்நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் மிகுந்த கவலையை அளிப்பதால், நீங்கள் உடனடியாக தலையிட்டு, டில்லியில் நடக்கும் குடி யரசுத் தின நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியை, சுதந்திர போராட்ட வீரர்கள் ஊர்தி அணி வகுப்பில் இடம்பெறச் செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும்.

-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment