"நியூகோவ் வைரஸ்" - பொதுமக்களிடம் பதற்றத்தை உருவாக்க வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 30, 2022

"நியூகோவ் வைரஸ்" - பொதுமக்களிடம் பதற்றத்தை உருவாக்க வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

சென்னை, ஜன.30 நியூகோவ் என்கிற வைரஸ் குறித்து சமூக வலைதளங்களிலும், ஊடகங் களிலும் பெரிதுப்படுத்தப்பட்டு செய்திகள் வருகின்றன. இச்செய்தி களை உலக சுகாதார நிறுவனம் போன்ற நிறுவனங்களால் உறுதி செய்யப்பட்டு அவர்கள் அறிவிக்கும் வரை காத்திருக்க வேண்டும். பொது மக்களிடம் பயத்தையும், பதற்றத் தையும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப் பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

கோவிலம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற 20-ஆவது மெகா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற் றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய் தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணி யன் கூறியது: 

"தமிழ்நாடு முதமைச்சரின் வழி காட்டு தலின்படி 20ஆ-வது மெகா மருத்துவ முகாம் தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற தொடங்கி உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால், ஊராட்சி பகுதிகளில் நடைபெறக்கூடிய தடுப்பூசி முகாம்கள் ஆய்வு செய்கிறோம்.  

தமிழ்நாட்டில் இதுவரை 9 கோடியே 39 லட்சத்து 87 ஆயிரத்து 902 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதில் 18 வயதினருக்கும் மேல் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 5 கோடியே 20 லட்சத்து 29 ஆயிரத்து 899 பேர். அதாவது 89.88 சதவிகிதம் பேர், 2ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 3 கோடியே 90 லட்சத்து 21 ஆயிரத்து 718 பேர். அதாவது 67.41 சதவிகிதத் தினர் செலுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 12,525 ஊராட்சிகளில் முதல் தவணை 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 2,669 பேராக உயர்ந்திருக்கிறது. 24 நகராட்சிகளில் 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பது மன நிறைவை தருகிறது. தமிழ்நாடு முழுவதும் முதல் தவணை தடுப் பூசியை 90 சதவிகிதத்தினரும், 2ஆவது தவணை தடுப்பூசியை 67 சதவிகிதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்திக் கொண்டால்தான் எதிர்காலத்தில் எந்த விதமான வைரஸ் வந்தாலும் அதை தடுக்கக்கூடியதாக இருக்கும் என்று மருத்துவ ரீதியாக அறி வுறுத்தப்பட்டுள்ளது. இப்போது ஏற்படக்கூடிய 95 சதவிகித உயிரிழப்புகள் தடுப்பூசி செலுத் தாதனாலும், இணை நோய் உள்ளவர்களும்தான் மரணத்தைத் தழுவுகிறார்கள். தடுப்பூசி ஒன்று தான் நம்மைக் காக்கக்கூடிய ஒன்று. ஆகவே அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

முதலமைச்சர் கிருஷ்ணகிரி மாவட்டம் சாமணப் பள்ளி கிராமத் தில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 19 லட்சத்து 21 ஆயிரத்து 519 பேருக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு 13 லட்சத்து 15 ஆயிரத்து 474 பேருக்கு வீடுதேடி சென்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. உயர்ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட 9 லட்சத்து 71 ஆயிரத்து 990 பேருக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப் பட்டுள்ளது. நோய் ஆதரவு சிகிச்சை சேவைகள் 1 லட்சத்து 71 ஆயிரத்து 68 பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது. 3 லட்சத்து 27 ஆயிரத்து 851 பேருக்கு பிசியோதெரபி சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை 47 லட்சத்து 09 ஆயிரத்து 66 பேர் இத்திட்டத்தில் முதல் முறையாக பயன்பெற்றிருக் கிறார்கள். தொடர்ந்து சிகிச்சை பெறுபவர்கள் 39 லட்சத்து 04 ஆயிரத்து 894 பேர். 86 லட்சம் பேருக்கு மருந்துப் பெட்டகங்கள் இலவசமாக வழங்கப்பட்டு பயன் பெற்றிருக்கிறார்கள்.

இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48 என்ற  திட்டத்தினால் 60-70 என்கிற அளவில் ஏற்பட்ட இறப்புகள் பாதிக்கும் மேல் குறைந் திருக்கிறது. மிக அற்புதமான இத் திட்டம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இத் திட்டத்தினால் இதுவரை பதி னைந்து ஆயிரத் திற்கும் மேற்பட்ட உயிர்கள் காக்கப்பட்டிருக்கிறது.

இதனால் பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் விபத்துக்கள் ஏற்பட்டால் உடனடியாக தொடர் புடைய மருத்துவமனைக்கு கொண்டு சென்று தங்களின் கடமைகளை ஆற்றிட வேண்டுமாய் கேட்டுக்கொள் கிறோம். இப்போது சீனாவில் நியூ கோவ் என்கிற வைரஸ் வவ்வா லால் ஏற்படுகிறது என்றும், இந்த வைரஸ் ஏற்பட்டால் 3 பேரில் ஒருவர் இறந்து விடுவார் போன்ற செய்திகள் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங் களிலும் பெரிதுப்படுத்தப்பட்டு செய்திகள் வருகின்றன. இச்செய்தி களை உலக சுகாதார நிறுவனம் போன்ற நிறுவ னங்கள் உறுதி செய்யப்பட்டு அவர்கள் அறிவிக்கப் பட்ட பின்னர் இச்செய்திகளை வெளியிடுமாறு கேட்டுக்கொள் கிறோம். ஏனென்றால் பொது மக்களிடம் பயத்தையும், பதற்றத் தையும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். இவற்றிற்கெல் லாம் ஒரே வழி தடுப்பூசி ஒன்றுதான்" என்று அமைச்சர்  தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை இணை இயக்குநர் வினய், துணை இயக்குநர் பரணி மற்றும் அரசு உயர் அதிகாரிகள்  கலந்துகொண் டனர்.

No comments:

Post a Comment