சென்னை, ஜன.30 நுகர்வோரே மின் கட்டணத்தை கணக்கிடும் வகையிலான அலைபேசி செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களுக்கு சேவைகளை வழங்கும் முயற்சியை தமிழ்நாடு மின்வாரியம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நுகர்வோரே மின் கட்டணத்தை கணக்கிடும் வகையிலான அலைபேசி செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியை அலைபேசியில் பதிவிறக்கம் செய்து மின் கட்டணத்தை கணக்கீடு செய்யலாம் எனவும், இந்த செயலியில் மீட்டர் ஒளிப்படத்தை பதிவேற்றம் செய்த ஒரு சில நிமிடங்களில் மின் கட்டண ரசீது குறுஞ்செய்தி வாயிலாக நுகர்வோருக்கு அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனை முயற்சியாக மின்வாரிய ஊழியர்களுக்கு இந்த செயலி வழங்கப்பட்டு, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் கணக்கிடும் பணிகளை தொடங்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் செயலியின் சாதகங்கள் மற்றும் பாதகங்களை நுகர்வோரின் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து தலைமை அலுவலகத்திற்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குருப்-4, குருப்-2 தேர்வுகளுக்கு
புதிய பாடத்திட்டம்
டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு
சென்னை, ஜன.30 குருப்-4, குருப்-2, குருப்-2-ஏ உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம், டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குருப்-2, குருப்-2-ஏ முதல்நிலைத் தேர்வு மற்றும் குருப்-4, குருப்-3, குருப்-7-பி, குருப்-8 மற்றும் சிறை அலுவலர் தேர்வு, உதவி சிறை அலுவலர் தேர்வு ஆகியவற்றுக்கான கட்டாய தமிழ்மொழி தகுதித்தேர்வுக்கான (கொள்குறிவகை) மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருப்பதாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
குருப்-2 மற்றும் குருப்-2-ஏ தேர்வுக்கான அறிவிப்பு வரும் பிப்ரவரி மாதத்திலும், குருப்-4 தேர்வுக்கான அறிவிக்கை மார்ச் மாதத்திலும் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே அறிவித்துஉள்ளது. இந்நிலையில், இத்தேர்வுகளுக்கு தற்போது புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் திட்டம்
சென்னை, ஜன.30 குறைந்த விலை மற்றும் நடுத்தர ரக வீடு வாங்கும் பிரிவினருக்கு முத்தூட் ஹோம்ஃபின் நிறுவனம் அடமான உத்தரவாதத்துடன் கடன் வழங்க முடிவு செய்துள்ளது. இதற்காக அய்.எம்.ஜி.சி. நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தம் மூலம் இன்னும் பலருக்கு வீட்டுக் கடன் வசதி குறைந்த வட்டி விகிதத்தில் கிடைக்க வழியேற்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் குறித்து அய்.எம்.ஜி.சி. நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மகேஷ் மிஸ்ரா கூறுகையில், முத்தூட் ஹோம்ஃபின் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்ததன் மூலம் அதிக அளவிலான மக்களை சென்றடையும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
மக்கள் வீட்டுக் கடன் பெறுவதை எளிதாக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. முத்தூட் நிறுவனம் வரும் நிதி ஆண்டுக்கு சில முக்கியத் திட்டங்களை இலக்காக
நிர்ணயித்துள்ளது. அவர்களுடன் இணைந்து செயல் படுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என அவர் தெரிவித் துள்ளார்.
உணவு தானியப் பொருள்கள்
விற்பனை விரிவாக்கம்
சென்னை, ஜன.30 அரிசி, ரவை, கடலைமாவு மற்றும் இதுபோன்றதொடர்புடைய தயாரிப்புகளின் விரிவான அணிவரிசையோடு புதிய வகையினங் களில் பலதயாரிப்புகளை வேகூல் கிச்சன்ஜி நிறுவனம் இந்தஆண்டு அறிமுகம் செய்யவிருக்கிறது. தினசரி பயன்படுத்துகின்றபருப்புவகைகளோடுசேர்த்துசோயாசங்க்ஸ் (மீல்மேக்கர்) மற்றும்பிறசிறஉணவுப்பொருட்களையும் இந்தபிராண்டுவழங்கும். முழுமையான தானியங்கள் என்றவகையினத்தையும்தாண்டிபல்வேறு மசாலா பவுடர்கள் மற்றும் கலவை மசாலாக்களையும் இந் நிறுவனம் வழங்கவிருக்கிறது.
இதுகுறித்து இந்நிறுவன தலைமை அதிகாரி ரவீந் திரன் பேசுகையில் கூறியதாவது:
தினசரி பயன்படுத்துகின்ற முதன்மை உணவுகளில் மட்டுமின்றி, அனைத்து உணவுப் பிரிவுகளிலும் பிராண்டுடன் விற்பனைக்கு வழங்கப்படும் தயாரிப்புகளை மக்கள் விரும்புவதில் கணிசமான வளர்ச்சிகாணப்படுகிறது.
தரத்தின்மீதுஅதுவும் குறிப்பாக கரோனா பெருந்தொற்று காலத்தின் போது சமரசம் செய்து கொள்ள குடும்பத்தலைவிகள் எவரும் விரும்புவதில்லை என்பதை நுகர்வோர் மீதான எமது ஆராய்ச்சி முடிவுகள் காட்டியிருக் கின்றன.
உணவுப் பாதுகாப்பு மற்றும் ஒரே மாதிரியான நிலையானதரம்என்பதற்கே அதிக முக்கியத்துவத்தை குடும்பத் தலைவிகள் தருகின்றனர். டெக் செய்யப் படாத அல்லதுபிராண்டுபெயரில்லாத
அல்லது வெறும் ஸ்டோரின் பெயரில் வழங்கப்படுகின்ற தயாரிப்புகளை வாங்குவதிலிருந்து பிராண்டு பெயரில் விற்பனைக்கு வழங்கப்படும் உணவுத் தயாரிப்புகளை வாங்குவதைநோக்கி குடும்பங்கள் மாறியிருக்கின்றன. என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment