தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் சிறீ வித்தியா - தலைமை ஆசிரியர் டாக்டர் அறவாழி ஆகியோரின் மகள் டாக்டர் கீர்த்திகா- _ திண்டுக்கல் மாவட்டம் பாப்பணம்பட்டி கணேசன் - ஜெயக்குமாரி ஆகியோ ரின் மகன் டாக்டர் சந்தர்பால் வாழ்க்கை இணையேற்பு விழா 23.-01.-2022 ஞாயிறு காலை 10.30 மணியளவில் தஞ்சாவூர் தீர்க்கசுமங்கலி திருமண மண்டபத்தில் நடைபெற்றது
மணமகளின் தந்தையார் டாக்டர் அறவாழி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
திராவிடர் கழகத் தலைவர், பெரியார் மணியம்மை நிகர்நிலைபல்கலைகழக வேந்தர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சென்னையிலிருந்து காணொலி மூலமாக வாழ்த்துரை வாழ்வியல் உரையாற்றினார்.
கொள்கைக் குடும்பம், கல்விக் குடும்பம், ரத்தஉறவு குடும்பம் என பல்கிப் பெருகி உள்ள உறவுகள் எங்களுக்கு உண்டு
அதில் தந்தைபெரியார் அவர்களின் சிக்கனத்தால் உருவான அறக்கட்டளை யின் கீழ் நடைபெறக்கூடிய பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலை கழகத் தில் பதிவாளராக சிறப்பாக பணியாற்றக் கூடிய டாக்டர் சிறீவித்தியா - டாக்டர் அறவாழி ஆகி யோரின் மகள் டாக்டர் கீர்த்திகா மணவிழாவில் கரோனா தொற்றுக் காரணமாக அரசின் கட்டுப் பாடு களுக்கு கட்டுப்பட்டு நேரடியாக பங்கேற்க முடியாவிட்டாலும் காணொலியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த மணமுறைக்கு ஒப்புக் கொண்ட மணமகன் சந்தர்பால் பெற்றோர் கணேசன் -_ ஜெயக்குமாரி ஆகியோருக்கு நன்றியையும் பாராட் டுதல்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
டாக்டர் சிறீ வித்தியா எந்த பொறுப்பைக் கொடுத் தாலும் சிறப்பாக பொறுப்போடு பணியாற்றக் கூடி யவர். அவர்கள் இல்ல விழாவில் பங்கேற்பதைவிட உங்களையெல்லாம் வரவேற்பதில் பெருமையடை கிறேன் என தனது உரையில் குறிப்பிட்டார்
ஆசிரியர்.
ஆசிரியர் அவர்களின் வாழ்விணையர் திருமதி மோகனா அவர்களும் காணொலியில் பங்கேற்றார்
தொடர்ந்து திராவிடர் கழக பொதுச்செயலாளர், பல்கலைகழக ஆட்சி மன்ற உறுப்பினர் வீ.அன்புராஜ் மணமக்களை உறுதிமொழி ஏற்க செய்து மண விழாவினை நடத்தி வைத்தார்.
திராவிடர் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் தி.மு.க மாநகர செயலாளர் டி.கே.ஜி. நீலமேகம் ஆகியோர் வாழ்த்துரையாற்றினார்கள்
திராவிடர் கழக கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் நிகழ்வை ஒருங் கிணைத்து நடத்தினார்
மணமகளின் தாயார் டாக்டர் சிறீவித்தியா நன்றி கூறினார்.
திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், தி.மு.க மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட நண்பர்கள், உறவினர்கள், சகபணி யாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
முதல்நாள் வரவேற்பில் கழகப் பொதுச்செயலா ளர்கள் வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார், கழக மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், முனைவர் அதிரடி அன்பழகன், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மண்டலத் தலைவர் மு. அய்யனார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், மாநகர செயலாளர் அ. டேவிட் உள்ளிட்ட உறவி னர்கள், நண்பர்கள், பெரியார் கல்வி குடும்ப பேரா சிரியர்கள் பணியாளர்கள் கலந்துகொண்டு சிறப் பித்தனர்.
No comments:
Post a Comment