அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ள தாவது: நடப்பு நிதியாண்டில், வேளாண் பொருட்களின் ஏற்றுமதி, இந்திய சரித்திரத்தில் முதன்முறையாக 3.70 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், கடந்த ஆண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலத்தில், கடல் பொருட் கள் மற்றும் தோட்டப் பொருட்கள் உள்ளிட்ட விவசாய பொருட்களின் ஏற்றுமதி 23.21 சதவீதம் அதிகரித்து, 2.30 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித் துள்ளது.
அமைச்சகம் ஏற்றுமதியை அதிக ரிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.பல்வேறு சான்றிதழ்கள் மற் றும் அங்கீகாரங்கள் ஆகியவற்றுக்கான காலக்கெடு முடிவடைந்தாலும், அதற் கப்பாலும் செல்லுபடியாகும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், ஏற்றுமதி சம்பந்தமான பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் கட்டுப்பாட்டு அறைகள் அமைத்தல், சான்றிதழ்களை இணையம் வாயிலாக வழங்குதல் என, பல நடவடிக்கைகள் அரசால் எடுக்கப் பட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கைகள் வாயிலாக, உலக தேவைகளை இந்தியாவால் எதிர் கொள்ள முடியும். கடல் பொருட்கள் ஏற்றுமதியும் இதுவரை இல்லாத வகையில், நடப்பு நிதியாண்டில், முதன் முறையாக 59 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அமைச்சகம் தெரிவித் துள்ளது.
No comments:
Post a Comment