மதவெறிக்கு ஓர் எல்லையே இல்லையா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 21, 2022

மதவெறிக்கு ஓர் எல்லையே இல்லையா?

மதவெறிக்கு ஓர் எல்லையே இல்லையா?  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

உத்தர்கண்ட் மாநிலத்தில், விசுவ இந்து பரிஷத்  நடத்திய தர்மசான்சாத் என்ற கூட்டத்தில், யதி நரசிம் மானந்த் என்றழைக்கப்படும் தீபக் தியாகி,  கடந்த டிசம்பரில் பேசிய, பகிரங்க வன்முறையைத் தூண்டும் பேச்சுகள் - குறிப்பாக சிறுபான்மை முஸ்லீம் சமூக மக்களுக்கு எதிராகப் பேசிய பேச்சு, நாகரிக காலத்தில்தான் நாம் வாழுகிறோமோ என்ற அய்யத்தை  ஏற்படுத்தி உலகம் முழுவதிலும் உள்ள கற்றறிந்த, நனி நாகரிகம் உள்ள மக்களையும் முகம் சுளிக்க வைத்த அருவருப்பான பேச்சாகும்.

மதவெறி கலகப் பேச்சுகளைக்

கட்டவிழ்த்து விடுகின்றனர் காவிச் சாமியார்கள்

சாதனைகளைச் சொல்லி வாக்குகளைப் பெற்று மீண்டும் ஆட்சியை அத்தகைய மாநிலங்களில் பிடிக்க முடியாது என்பதால், இப்படிப்பட்ட வன்மம் நிறைந்த மதவெறி கலகப் பேச்சுகளைக் கட்டவிழ்த்து விடுகின்றனர் அங்குள்ள காவிச் சாமியார்கள்.

பாபர் மசூதி இடிப்பு - அந்த இடத்தில் இராமன் கோயில் கட்டுவது போன்று திட்டமிட்டு,  எல்லா அமைப்புகளையும் தன் வயப்படுத்திக் கொண்டு செயலில்  இறங்கி மதக் கலவரங்களை வெடிக்க வைத்ததில்கூட, மிகச் சாமர்த் தியமாக ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நேரடியாக ஈடுபடாமல், அத்தகைய பணிகளுக்கென்று சங் பரிவாரில் உள்ள விசுவ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் (அனுமன் படை), தர்ம சான்சாட் என்ற சாமியார்கள் அமைப்பு போன்ற இவர்களை ஏவிவிட்டு, இறுதிக்கட்டத்தில் அது தங்களின் சாதனை என்று தம்பட்டம் அடிக்கும் மதவெறியை வடபுலத்தில் மூலதனமாக்கியே ஆட்சியைத் தம் வசமாக்கிக் கொள்ளு கிறது பா...

இத்தகைய வியூகங்களிலும், வித்தைகளிலும் கை தேர்ந்தவர்கள் என்பதால்தான் இப்போது வன்முறையை பகிரங்கப்படுத்திப் பேசி வருகின்றனர். நாட்டின் பாதுகாப் புக்காக சேவை புரிந்து ஓய்வு பெற்ற படைத் தளபதி களிலிருந்தும், ஓய்வு பெற்ற நீதிபதிகள், கல்வியாளர்கள், ஏட்டாளர்கள் சிலரின் கண்டனத்திற்கு ஆளாகி - அவர்களில் சிலர் பா... அரசின் மவுனம் கலைக்க, உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு, அது சில நாட் களுக்குமுன் தலைமை நீதிபதி அமர்வின்முன் விசாரணைக்கு வந்து, தாக்கீது உத்தரகாண்ட் அரசுக்கு அனுப்பிய நிலையில், முன்பே எப்.அய்.ஆர்.-அய்த் தாக்கல் செய்தும், ஜனவரி 12 ஆம் தேதிதான் - அரித்துவாரில் பேசிய மதவெறித்தன பேச்சுகளுக்கு கைது நடவடிக்கை.... உடனடியான கைது நடவடிக்கை ஏதும் இல்லையே ஏன்?

41A .பி.கோ.வின்படி தாக்கீது கொடுக்கப்பட்டும், யதி நரசிம்மானந்த் அதைச் சட்டை செய்யாததால், அவர்மீது இரண்டு வழக்குகளிலும் - மற்றொரு வழக்குப் பெண்களை மிகக் கேவலமாகப் பேசியதையும் சேர்த்து - நடவடிக்கை யாக கைது தொடங்கியுள்ளது. நீதிமன்றக் காவல் 14 நாள்களுக்கு விதித்து சிறைக்கு அனுப்பிவிட்டனர்!

காவல்துறையினரை அச்சுறுத்தி - வசைமாரிப் பொழிந்தார் ஜித்தேந்திர நாராயண்சிங்

வாசிம் ரிஜ்வி  என்று அழைக்கப்படும் ஜித்தேந்திர நாராயண்சிங் உரையின் காட்சிப் பதிவு சமூக வலை தளங்களில் ஏராளமாகப் பரவிய நிலையில் ஜனவரி 13 ஆம் தேதி கைது செய்யச் சென்ற காவல்துறையினரை அச்சுறுத்தி - வசைமாரிப் பொழிந்தார்.

இவர்மீது .பி.கோ. - (IPC) 153A    பிரிவின்கீழ், காவல் துறை வழக்குப் பதிவு செய்தது, மீண்டும் டிசம்பர் 17இல் இப்பேச்சு காட்சிப் பதிவின் மூலம் பரப்பப்பட்டபோது 295A (IPC)  பிரிவினைச் சேர்த்து வழக்குப் போடப்பட்டது. இவர் முஸ்லீமாக இருந்தவர். ஹிந்து மதத்திற்கு மாறியவர். .பி.யின் ஷியா பிரிவுக்கான வஃக்போர்டின் மேனாள் தலைவர்.

அதன் பிறகு மேலும் சிலரை குற்றவாளிகளாக அம்மாநில காவல்துறை சேர்த்தது. (1) யதி நரசிம்மானந்த், (2) அன்னபூர்ணா பார்தி என்ற பூஜா சகூன் பாண்டே, (3) தர்மதாஸ், (4) சாகர் சிந்து மஹராஜ் உள்ளிட்ட காவிச் சாமியார்களின் கூட்டம்!

இந்த நடவடிக்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து அதன் தாக்கீது அந்த அரசின் காவல்துறைக்குக் கிடைத்ததன் பின்னேதான்.

பா...வின் தலைவர்கள் எவரும்

ஒரு கண்டன அறிக்கைகூட வெளியிடவில்லை

நாடே வெகுண்டு எழுந்து கொந்தளிப்புடன் குமுறும் நிலை - அதுவும் பச்சையாக "சிறுபான்மைச் சமூகத்தவரை கொல்லுவோம் - கொலை செய்வோம்" என்று பேசி மதவெறி, மதக் கலவர மூட்டல் என்று நச்சு விதை விதைக்கும் இந்த விரும்பத்தகாத போக்குபற்றி பிரதமரோ, பா...வின் தலைவர் நட்டா என்பவரோ, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தோ எவரும் ஒரு கண்டன அறிக்கைகூட வெளியிடவில்லை.

பேச வேண்டிய நேரத்தில் பேசாதிருந்தால் அதற்குப் பொருள் என்ன? - நியாயமான கேள்வி.

நாடு கடந்த 7 ஆண்டுகளில் எப்படியெல்லாம் சீர் கெட்டுச் செல்லுகிறது; குறைந்தபட்ச மானுடநேயம்கூட இல்லையே ஒன்றிய அரசின் நாயகர்களுக்கு!

ஒன்றுபட்ட நாடு - சமூகம் 'வளர்ச்சி' - மிஸீநீறீusவீஸ்மீ நிக்ஷீஷீஷ்tலீ என்பதன் லட்சணம் இதுதானா? அனைவரையும் உள் ளடக்கிய வளர்ச்சியின் அடையாளமா இது!

நல்லோர்கள் சிந்திக்கட்டும்! ஜனநாயகம் என்பது அனைவருக்கும் என்ற நிலை மாறி, குறிப்பிட்ட சிலரது ஆதிக்கத்திற்கானதன்; காரணம்,   அவர்களுக்கு 2019 இல் கிடைத்த 'மிகுதிப் பெரும்பான்மை' - 'புல்டோசர் மெஜா ரிட்டி'   தானே - மக்களே யோசியுங்கள்.

கி.வீரமணி 

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை       

21.1.2022            

No comments:

Post a Comment