அலங்கார ஊர்தியும் - அகங்கார அரசும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 22, 2022

அலங்கார ஊர்தியும் - அகங்கார அரசும்

நாட்டின் 73 ஆவது குடியரசு நாள் விழா ஜனவரி 26 ஆம் தேதி வெகு கோலாகமாகக் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், அணிவகுப்பில் பங்கேற்கும் மாநில அலங்கார ஊர்திகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இந்நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பிரதமர் நரேந்திர மோடிக்கு  எழுதிய கடிதத்தில், “குடியரசு நாள் விழா அணிவகுப்பில் மேற்கு வங்க அலங்கார ஊர்திக்கு எந்தவொரு காரணமும் அல்லது நியாயமும் கூறப்படாமல் அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது.நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, மேற்கு வங்கத்தின் சார்பில் அவரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையிலான அலங்கார ஊர்தி சிறப்பாகத் தயார் செய்யப்பட்டுள்ளதுஎன குறிப்பிட்டுள்ளார்.

அணிவகுப்பிற்கு இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அட்டவணையை அரசு தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வாக வெளியிடவில்லை. கிடைத்த தகவலின்படி, இந்தாண்டு அணிவகுப்பில் 21 அலங்கார ஊர்திகள் இருக்கும். அதில் 12 மாநில அலங்கார ஊர்திகளும், ஒன்றிய அரசு அல்லது தனியார் நிறுவனங்களின் கீழ் உள்ள ஒன்பது துறைகள் சார்பான ஊர்திகளும் இடம்பெறும் என தெரிகிறது.

மேற்கு வங்கத்தின் அலங்கார ஊர்தி மற்றும் கேரளா சார்பில் முன்மொழிந்த சிறீநாராயண குருவைக் கொண்ட அலங்கார ஊர்தியும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அணிவகுப்புக்கு பொறுப்பான பாதுகாப்பு அமைச்சகம், இந்த முடிவு நிபுணர் குழுவால் எடுக்கப்பட்டது. இதில் எந்த அரசியல் தலையீடும் இல்லை என்றும் கூறுகிறது.

பாதுகாப்பு அமைச்சகம் கலை, கலாச்சாரம், ஓவியம், சிற்பம், இசை, கட்டடக்கலை, நடனம் போன்ற துறைகளில் இருந்து புகழ்பெற்ற நபர்களைக் கொண்ட ஒரு நிபுணர் குழுவை அமைக்கிறது. அவர்கள் முன்மொழிவுகளில் இருந்து ஊர்திகளை முடிவு செய்திட உதவுகிறார்கள்.

முதலில், முன்மொழிவுகளில் சமர்ப்பிக்கப்பட்ட ஓவியங்கள் அல்லது வடிவமைப்புகள் இந்தக் குழுவால் ஆய்வு செய்யப்படுகின்றன. ஏனென்றால், இது ஓவியம் அல்லது வடிவமைப்பில் ஏதேனும் மாற்றங்களுக்கான பரிந்துரையை செய்யலாம்.

முன்மொழிவு தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், பங்கேற்பாளர்கள் தங்கள் ஊர்தியின் முப்பரிமாண (3டி டிசைன்) மாதிரியை சமர்ப்பிக்க வேண்டும். அவை பல அளவுகோல்கள் அடிப்படையில், இறுதித் தேர்வுக்காக நிபுணர் குழுவால் மீண்டும் பரிசோதிக்கப்படுகின்றன.

இறுதித் தேர்வை மேற்கொள்கையில் நிபுணர் குழுவானது, காட்சி முறையீடு, வெகுஜனங்களின் மீதான தாக்கம், யோசனை - கருப்பொருளின் யோசனை இசையுடன் கூடிய மற்ற காரணிகளையும் பார்க்கிறது.

காழ்ப்புணர்ச்சி

இந்த குழு பல நாள்களில் 6க்கு மேற்பட்ட முறை சந்தித்து ஆலோசித்து, ஊர்திகளை முடிவு செய்கின்றது. முடிவு செய்த பிறகு, சம்பந்தப்பட்ட பங்கேற்பாளர்களுக்கு அடுத்த சுற்றுக் குறித்து தகவல் அளிக்கப்படும்.

பாதுகாப்பு அமைச்சகம் ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் ஒரு டிராக்டர் மற்றும் ஒரு டிரெய்லரை வழங்குகிறது. அதில், ஊர்தி பொருத்தப்பட வேண்டும்.

கூடுதல் டிராக்டர் அல்லது டிரெய்லர் அல்லது வேறு எந்த வாகனத்தை அத்துடன் இணைத்திட பாதுகாப்பு அமைச்சகம் தடை விதித்துள்ளது.

பங்கேற்பாளர்கள் கருப்பொருளைக் கருத்தில் கொண்டு ஊர்தி அருகில் தரை வழியாக கொண்டு செல்ல ஏற்பாடு செய்யலாம்.

ஊர்தி வைக்கப்படும் டிரெய்லரின் பரிமாணங்கள் 24 அடி, 8 அங்குல நீளம்; எட்டு அடி அகலம்; நான்கு அடி இரண்டு அங்குலம் உயரம்; 10 டன் சுமை தாங்கும் திறன் கொண்டது ஆகும். எனவே, ஊர்தியானது, 45 அடிக்கு மேல் நீளத்திற்கு அதிகமாகவோ, அகலம் 14 அடிக்கு மேலாகவோ, தரையில் இருந்து 16 அடி உயரத்துக்கு மேலாகவோ இருக்கக்

கூடாது.

 இதன் படி அனைத்து விதிமுறைகளும் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு ஒத்துவரும் போது காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியை ஒன்றிய அரசு நிராகரித்துவிட்டது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment