ஒலி முழக்கங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 24, 2022

ஒலி முழக்கங்கள்!

1)            வாழ்க வாழ்க வாழ்கவே

               தந்தை பெரியார் வாழ்கவே!

2)            வெல்க வெல்க வெல்கவே

               திராவிடக் கொள்கைகள் வெல்கவே!

3)            குடியரசு தின விழாவிலே

               குடியரசு தின விழாவிலே

               புறக்கணிப்பா, புறக்கணிப்பா?

               தமிழ்நாடு புறக்கணிப்பா!

4)            கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்

               ஒன்றிய அரசைக் கண்டிக்கிறோம்!

5)            ஒன்றிய அரசின் கண்ணோட்டத்தில்

               ஒன்றிய அரசின் கண்ணோட்டத்தில்

               தமிழ்நாடு இல்லையா, இல்லையா?

               கிடையாதா - கிடையாதா?

6)            அலங்கார அணிவகுப்பா, அணிவகுப்பா?

               ஆர்.எஸ்.எஸ். திட்டத்தின் முன்னெடுப்பா?

7)            ஒன்றிய அரசே, ஒன்றிய அரசே,

               கொச்சைப்படுத்தாதே, கொச்சைப்படுத்தாதே!

               செக்கிழுத்த செக்கிழுத்த

               சிதம்பரனாரின் சிதம்பரனாரின்

               தியாகத்தை, தியாகத்தை

               கொச்சைப்படுத்தாதே, கொச்சைப்படுத்தாதே!

8)            தியாகச் செம்மல் சிதம்பரனார்

               வியாபாரியாம், வியாபாரியாம்!

               காட்டிக் கொடுத்த காட்டிக் கொடுத்த

               காவிகள் எல்லாம் தியாகிகளா? தியாகிகளா?

9)            வேலு நாச்சியார் வேலு நாச்சியார்

               வீராங்கனை இல்லையா, இல்லையா?

               ஜான்சிராணிதான் வீராங்கனையா?                                                     வீராங்கனையா?

               வேறுபடுத்திப் பார்ப்பது ஏன்?

               வேறுபடுத்திப் பார்ப்பது ஏன்?

10)         தெரியாதா தெரியாதா?

               மருது சகோதரர்களை, மருது சகோதரர்களை

               தெரியாதா, தெரியாதா?

               சரித்திரம் தெரியாத, சரித்திரம் தெரியாத

               பேர்வழிகள் எல்லாம், பேர்வழிகள் எல்லாம்

               நிபுணர்களா, நிபுணர்களா?

11)         தேசிய கவி பாரதியார் என்று

               நித்தம் பேசும் பார்ப்பனர்களே!

               கண்டனக் குரலை, கண்டனக் குரலை

               எழுப்பாதது ஏன், எழுப்பாதது ஏன்?

12)         ஒன்றிய அரசே, ஒன்றிய அரசே

               பறிக்காதே, பறிக்காதே

               மாநில உரிமைகளைப்

               பறிக்காதே, பறிக்காதே!

               ஒரே நாடு இந்தியா என்னும்

               ஒரே நாடு இந்தியா என்னும்

               ஆர்.எஸ்.எஸ். கொள்கையைத் திணிக்காதே!

13)         ஒன்றிய அரசே, ஒன்றிய அரசே

               புதைக்காதே, புதைக்காதே

               கூட்டாட்சித் தத்துவத்தை,

               கூட்டாட்சித் தத்துவத்தை

               புதைக்காதே, புதைக்காதே!

14)         குடியரசு நாளில் அணிவகுப்பாம், அணிவகுப்பாம்!

               பா... ஆளுகின்ற, பா... ஆளுகின்ற

               மாநிலங்களின், மாநிலங்களின்

               அணிவகுப்பாம், அணிவகுப்பாம்!

15)         தேசியம் பேசும் அண்ணாச்சி

               தேசியம் பேசும் அண்ணாச்சி

               பிரித்துப் பிரித்துப் பார்க்கலாமா?

               பேத உணர்ச்சியைக்

               காட்டலாமா? காட்டலாமா?

16)         தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாடு

               தன்மான உணர்வின் பூக்காடு!

               சகிக்க மாட்டோம், சகிக்க மாட்டோம்

               சுயமரியாதையை சுயமரியாதையைத்

               தீண்டினால், தீண்டினால்

               சகிக்கமாட்டோம், சகிக்கமாட்டோம்!

17)         போராடுவோம், வெற்றி பெறுவோம்!

               வெற்றி கிட்டும்வரை போராடுவோம்!

18)         விட்டுக் கொடுக்கமாட்டோம்,

               விட்டுக் கொடுக்கமாட்டோம்!

               மாநில உரிமைகளை, மாநில உரிமைகளை

               விட்டுக் கொடுக்கமாட்டோம்,

               விட்டுக் கொடுக்கமாட்டோம்!

19)         வாழ்க, வாழ்க வாழ்கவே!

               தந்தை பெரியார் வாழ்கவே!

               வெல்க, வெல்க வெல்கவே!

               திராவிடக் கொள்கைகள் வெல்கவே!

- திராவிடர் கழகம் -

No comments:

Post a Comment