இந்தியாவில் புதிதாக 3.33 லட்சம் பேருக்கு தொற்று - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 24, 2022

இந்தியாவில் புதிதாக 3.33 லட்சம் பேருக்கு தொற்று

புதுடில்லி,ஜன.24- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3லட்சத்து 33ஆயிரத்து 533 பேருக்கு தொற்று உறுதியானது. தொடர்ந்து 2ஆவது நாளாக கரோனா தொற்று சற்றே குறைந்துள்ளதுகரோனா தாக்கம் அதிகமுள்ள மாநிலங்களின் பட்டியலில் மகாராட்டிரா முதலிடத்திலும், கேரளா, கருநாடகா, தமிழ்நாடு முறையே 2,3,4 ஆம் இடங்களிலும் உள்ளன.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு: கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 3,33,533. இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,92,37,264. கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 2,59,168. இதுவரை குணமடைந்தோர்: 3,45,70,131. சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை: 21,87,205. தினசரி பாசிடிவிட்டி விகிதம் 17.78% என்றளவில் உள்ளது. (பாசிடிவிட்டி ரேட் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாகிறது என்பதன் விகிதம்) கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 525. கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,89,409. இதுவரை இரண்டாம் தவணை உள்பட கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 1,61,47,69,885 (161 கோடி). 

No comments:

Post a Comment