காந்தியடிகளின் 75ஆவது நினைவு நாள் - 30.1.2022 காந்தி என்பவர் தனி மனிதரல்ல - தத்துவமாக வாழ்ந்தவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 30, 2022

காந்தியடிகளின் 75ஆவது நினைவு நாள் - 30.1.2022 காந்தி என்பவர் தனி மனிதரல்ல - தத்துவமாக வாழ்ந்தவர்

காந்தி என்பவர் தனி மனிதரல்ல & தத்துவமாக வாழ்ந்து இறுதியில் வள்ளலார் போல உண்மையை உணர்ந்தவர்; அதன் விளைவே அவரது உயிர்த் தியாகம் & பலி. மறவாதீர்! என காந்தியடிகளின் 75ஆவது நினைவு நாளான இன்று (30.1.2022) திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்

கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

"காந்தியை சுட்டுக் கொன்றவர் மராத்தியப் பார்ப்பனரான கோட்சே என்ற உண்மைத் தகவல் பரவியவுடன் மராத்திய மண்ணில் - சத்தாரா போன்ற பகுதிகளில் பார்ப்பனர்கள் பலர் தாக்கப்பட்டார்கள்; அக்கிரகாரங்கள் சூறையாடப்பட்டன" என்று அன்று பம்பாய் மாநில உள்துறை அமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் 'தன் வரலாறு'  நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் திராவிடர் இயக்கம் - பார்ப்பனீயத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் பெயர்க்கத் துவக்கப்பட்ட தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் பலமாக உள்ள தமிழ்நாட்டில், தந்தை பெரியார், "தனிப்பட்ட முறையில் வன் முறைக்கு ஆளாகி, பார்ப்பனர்களைத் தாக்குவது தேவையா? இதற்கு மூல காரணமான மதவெறியை இந்த மண்ணி லிருந்து அகற்ற அனைவரும் முயல வேண்டும்.

மதவெறியை ஒழித்திட பாடுபட வேண்டும்

துப்பாக்கியைத் தண்டிப்பது போன்றது தான் தனி மனிதர்களைத் தாக்குவது; மாறாக கைகள் துப்பாக்கியைப் பிடித்தன என்றால் -  அதற்குக் காரணமானது மதவெறி தானே; அதையல்லவா ஒழித்திட அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்" என்று கூறி, அமளி துமளி ஏற்படாது, கலவரங்களை அடங்குமாறுச் செய்தார். அந்தப் பெருமை தந்தை பெரியாரையே சாரும்.

இதே உணர்வுடன்,  மதவெறி கண்டன நாளில் நாடு முழுவதும் கட்சி, ஜாதி, மத வேறுபாடு இன்றி ஒன்றுபட்டு உறுதி எடுக்க வேண்டும்.

'மக்கள் தீர்ப்புநாள்' - வெகு தொலைவில் இல்லை

'மதப் படுகொலை செய்வோம்' என்று மதவெறியர்கள், காவிகள் முழங்கினால் சட்டமும், அரசுகளும் வேடிக்கைப் பார்க் கின்றன. உச்சநீதிமன்றம் கேட்ட பிறகு - சடங்கு போல் சில ஒப்பனை நட வடிக்கைகள்.

"மக்கள் தீர்ப்பு நாள்" வெகு தொலை வில் இல்லை - காந்தி என்பவர் தனி மனிதரல்ல - தத்துவமாக வாழ்ந்து இறு தியில் வள்ளலார் போல உண்மையை உணர்ந்தவர்; அதன் விளைவே அவரது உயிர்த் தியாகம் பலி, மறவாதீர்!

'மதவெறி மாய்ப்போம், மனிதநேயம் காப்போம்!'

 கிவீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை       

30.1.2022            

No comments:

Post a Comment