தமிழ்நாட்டில் புதிதாக 26,981 பேருக்கு கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 20, 2022

தமிழ்நாட்டில் புதிதாக 26,981 பேருக்கு கரோனா

 

சென்னை, ஜன.20 தமிழ் நாட்டில் பொங்கல் விழா விடுமுறை முடிவடைந்துள்ள தால் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் நேற்று 26 ஆயிரத்து 981 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

தமிழ்நாட்டில்  கடந்த இரு தினங்களாக குறைந்த தொற்று எண்ணிக்கை நேற்று (19.1.2022) அதிகரித்துள்ளது. அந்த வகை யில் நேற்று முன்தினம் எண் ணிக்கையை விட 3093 அதி கரித்து உள்ளது.

இந்த நிலையில் தமிழ் நாட்டில் நேற்றைய கரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப் பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் நேற்று (19.1.2022) புதிதாக 1 லட்சத்து 44 ஆயிரத்து 816 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 15,477 ஆண்கள், 11,504 பெண்கள் என மொத்தம் 26 ஆயிரத்து 981 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதில் அதிகபட்சமாக சென் னையில் 8,007 பேரும், கோவை யில் 3,082 பேரும், செங்கல்பட்டில் 2,194 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 103 பேரும், அரியலூரில் 88 பேரும் பாதிக் கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட் டில் நேற்று வெளிநாட்டில் இருந்து வந்த 4 பேர், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 28 பேர் உள்பட 12 வயதுக்குட்பட்ட 898 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதிய வர்கள் 4,032 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மருத்துவமனை சிகிச்சையில்...

தமிழ்நாட்டில் இதுவரை 30 லட்சத்து 14 ஆயிரத்து 235 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டு உள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து 13 ஆயிரத்து 391 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 4 லட்சத்து 36 ஆயிரத்து 415 முதிய வர்களும் இடம் பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரப்படி 8 ஆயிரத்து 816 பேர் மருத்துவமனைகளில் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின் றனர். இதில் 4 ஆயிரத்து 157 பேர் ஆக்சிஜன் வசதி படுக்கை கொண்ட வார்டுகளிலும், 953 தீவிர சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

35 பேர் உயிரிழப்பு

கரோனாவுக்கு தமிழ் நாட்டில் அரசு மருத்துவ மனையில் 12 பேரும், தனியார் மருத்துவமனையில் 23 பேரும் என 35 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். அதில் அதிகபட்சமாக சென் னையில் 12 பேரும், செங்கல் பட்டில் 5 பேரும், காஞ்சிபுரத்தில் 3 பேரும், ஈரோடு, மதுரை, திருச்சியில் தலா இருவரும், கோவை, கடலூர், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூரில் தலா ஒருவரும் என 15 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 37 ஆயிரத்து 73 பேர் கரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கரோனா பாதிப்பில் இருந்து நேற்று 17 ஆயிரத்து 456 பேர் குணமடைந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 7,298 பேரும், செங்கல்பட்டில் 1,817 பேரும், திருவள்ளூரில் 956 பேரும் அடங்குவர்.

இதுவரையில் 28 லட்சத்து 6 ஆயிரத்து 501 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழ் நாட்டில் கரோனா பாதித்த 1 லட்சத்து 70 ஆயிரத்து 661 பேர் குணமடையாமல் சிகிச்சையில் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment