சென்னை, ஜன.31 கோயில் சொத்து வாடகை பாக்கி விவரங் களை பிப். 15-ஆம் தேதிக்குள் இணையத்தில் பதிவேற்றம் செய்ய அதிகாரிகளுக்கு அறநிலை யத் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, இந்து சமயஅறநிலையத் துறை ஆணை யர்ஜெ.குமரகுருபரன் இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,
சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி இந்து சமய அறநிலையத் துறை கட்டுப் பாட்டில் உள்ள அறநிறுவ னங்களுக்கு சொந்தமான அசை யாச் சொத்துகளில் வசூல் செய்யப்படவேண்டிய நிலுவை தொகை விவரத்தை 2 வாரத் துக்குள் தாக்கல் செய்திட உத்தர விடப்பட்டிருந்தது.
இவ்வழக்கு மீண்டும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அனைத்து அறநிறுவனங்களின் கடந்த ஆண்டு அக்.31 வரையிலான கேட்பு வசூல் நிலுவை விவர அறிக்கை இந்த அலுவ லகத்தில் பெறப்பட்டு தொகுக்கப் பட்ட விவரப்படி கேட்பு ரூ.2,530.60 கோடியாக உள்ளது. மேலும், இணையதள வழியில் சார்நிலை அலுவலர்களால் பதி வேற்றம் செய்யப்பட்ட கேட்பு வசூல் நிலுவை விவரப்படி ரூ.2,193.29 கோடியாக உள்ளது.
எனவே, இந்த முரண்பாட்டை நேர் செய்யும் வகையில் நிலுவை விவரங்களை பிப். 15-க்குள் பதி வேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment