தமிழ்நாடு மீனவர்களைக் காக்கும் ஒன்றிய அரசின் இலட்சணம்! தமிழ்நாட்டு மீனவர்களின் 105 படகுகளை ஏலம்விட இலங்கை முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 24, 2022

தமிழ்நாடு மீனவர்களைக் காக்கும் ஒன்றிய அரசின் இலட்சணம்! தமிழ்நாட்டு மீனவர்களின் 105 படகுகளை ஏலம்விட இலங்கை முடிவு

இராமேசுவரம்,ஜன.24-இராமேசுவரம், மண்ட பம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழ் நாட்டின் பல்வேறு ஊர் களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மீன்பிடி பட குகள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் இலங்கை கடற் படையால் பறிமுதல் செய் யப்பட்டு யாழ்ப் பாணம் காங்கேசன்துறை, காரை நகர், தலைமன்னார் உள் ளிட்ட பல்வேறு இடங் களி லும் நிறுத்தி வைக்கப் பட்டு உள்ளன.

இந்த நிலையில் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு யாழ்ப் பாணம் காங்கேசன்துறை, காரைநகர், மன்னார் உள் ளிட்ட பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர் களின் படகுகள் ஏலம்விடப்படுவதாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பில், இந்திய படகுகள் 105 படகுகள் ஏலம் விடப் படும். வருகிற பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரையிலும் ஏலம் நடைபெறுவதாக வும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இலங்கையில் பிடித்து வைக்கப்பட்டு உள்ள தமிழ் நாட்டு மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் நடவடிக்கை ஒட்டு மொத்த தமிழ்நாடு மீன வர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச் சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி ராமேசு வரம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் தேவதாஸ் கூறியதாவது:-

தமிழ்நாட்டு மீனவர் களின் 100-க்கும் மேற்பட்ட படகுகள் ஏலம் விடப்பட உள்ளதாக இலங்கை அரசால் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இலங்கை அர சின் இந்த செயலுக்கு ஒட்டு மொத்த தமிழ் நாட்டு மீனவர்கள் சார் பாக கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். படகுகளை மீட்டு தர நட வடிக்கை எடுக்க வேண் டும் என பலமுறை ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத் தும் கண்டுகொள்ள வில்லை.

ஒன்றிய  அரசு நினைத் தால் இலங்கையில் உள்ள தமிழ்நாட்டு படகுகளை மீட்டு கொண்டுவர முடி யும். மீனவர்களின் வாழ் வாதாரத்தை கருத்தில் கொண்டு படகுகள் அனைத் தும் மீட்டு கொண்டுவர வேண்டும் என்பதே மீன வர்களின் கோரிக்கையா கும்.  இவ்வாறு அவர் கூறி னார்.

No comments:

Post a Comment