சிந்தனையாளர் ஆசிரியர் வீரமணி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 2, 2021

சிந்தனையாளர் ஆசிரியர் வீரமணி!

முனைவர் பேராசிரியர் ..மங்கள முருகேசன்

89ஆவது பிறந்தநாள் காணும் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி ஒரு சிந்தனையாளர். அவர் திராவிடர் கழகத் தோழர்களுக்குதலைவர், திராவிடர் கழகம்என்பது முகவரி.

தந்தை பெரியார் அவரைச் செதுக்கியதுவிடுதலை' ஆசிரியர் எனவே பலருக்கும் அவர் ஆசிரியர்.

செதுக்கினாரா? ஆம். தந்தை பெரியார் கடலூரில் வழக்குரைஞராகப் பணியாற்றியவரைக் கையைப் பிடித்து இழுத்து வந்து, ஆம்! பத்து வயதில் இருந்து மேடைப் பேச்சாளராக விளங்கி அதில் தேர்ச்சியும், ஏறக்குறைய முதுமையும், தனக்கெனத் தனிப் பாணி வகுத்தவரை முப்பது வயதிலேயே சிறிதும் முன் அனுபவம் ஏதும் இல்லாதவரைவிடுதலை' ஆசிரியர் என்று சிந்தாதிரிப்பேட்டை தகரக் கொட்டகை விடுதலை அலுவலகத்தில் வைத்தார்.

அந்தப் பட்டறிவு பெற்ற பாங்கை அவரே பலமுறை நகைச்சுவை படக் கூறியிருக்கிறார். எப்படி? அய்யா எனக்குப் புதிது இது. எப்படி இப்பணியைச் செய்வேன்? என்ன எழுதுவது என்று கேட்டபோது, அய்யா பெரியார் இப்படி வழிகாட்டினாராம்.

ஒன்றும் கவலைப்படாதே மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு இந்துப் பத்திரிக்கையை எடுத்துக்கொள்! அதில் வரும் தலையங்கத்தை எதிர்த்து எழுது சரியாய் இருக்கும்என்றாராம்.

அதையே பின்பற்றினேன்! என்று எடுத்துக் காட்டு ஒன்றும் சொன்னார். மண்டல் அறிக்கையை ‘Bury Mandal’  என அவ்வேடு எழுத ‘Hurry Mandal’என எழுதினேன் என்றார். இப்படி ஒட்டிக் கொண்டு விட்டப் பெயர் தான்ஆசிரியர் வீரமணிஎத்தனை ஆண்டுகள்? 60 ஆண்டுகள். உலகிலேயே கலைஞரைத் தவிர வேறு எவரும் இத்தனை ஆண்டுக்காலம்ஆசிரியர்பட்டம் தாங்கியோ, ஆசிரியர் என்று அழைக்கப்பட்டோ இருக்க மாட்டார்கள்.

தந்தை பெரியார் உலக மயமானார். உலகத் தலைவர் தந்தை பெரியார் ஆனார். நம் அனைவருக்கும் வாழும் தமிழர் தலைவர் ஆனார் ஆசிரியர்.

தந்தை பெரியாருக்குப் பின் அன்னை மணியம்மையா ருக்குப் பின் திராவிடர் கழகத் தலைவர் ஆனார்.

உயரத்தில் அண்ணாவைப் போல் உயரம் குறைந்தவர், ஆனால் சிந்தனை வளத்தில், அறிவுத் திறத்தில் மிக, மிக உயரமானவர். அதுமட்டுமல்ல. ஆசிரியரின் உரையிலும் சரி, உரையாடலிலும் சரி, விமர்சனங்களிலும் சரி, நகைச்சுவை மிளிரும்! அதிலும்பஞ்ச்எனும் பளிச்சிடும் சிந்தனை முத்துக்கள் இருக்கின்றனவே அவை தனி ஒரு ரகம்.

பெரியார் திடல் மேலாளர் சீத்தாராமன் குறிப்பிடுவார். அய்யா, சில வேளைகளில் இரண்டே இரண்டு சொற்கள்தான் உதிர்த்திடுவார். அது சாதாரணமான சொற்கள் அல்ல. இரண்டே இரண்டு வார்த்தை மணிகள்தாம் ஆனால் அது வெடிகுண்டு போல, அணுகுண்டுப் போல என்பார்.

அவர் தோற்றம் இன்றும் நரையை நீக்கிப் பார்த்தால் இளமைத் தோற்றம் தான். ஆனால் அவர் தாத்தா - பாட்டன் - பூட்டன் என்றால் நம்புவதற்குக் கடினமாக இருக்கும். அவர் மக்களைப் பெற்று, மக்கள் வயிற்றிலே பிள்ளையைப் பெற்றுப் பிள்ளை  வயிற்றிலே பேரனைப் பெற்று, பேரன் வயிற்றிலேயும் ஒரு பேரன் கண்டவர்.

இத்தனை வரிசைகளையும் தாண்டிய அவர் - அவர் வேண்டுமானாலும் கூறலாம்எனக்கு என்று சொந்த அறிவு வேண்டுவதில்லை. தந்தை பெரியார் கொடுத்த அறிவு மட்டும் போதும்என்று. ஆனால் அவர் சொல்வது போல அய்யா கொடுத்த அறிவு நிரம்பி வழிந்தாலும், ‘கட்டிக் கொடுத்த சோறும், கற்றுக் கொடுத்த பாடமும் எத்தனை நாளைக்கு மிகும்?”

திருவள்ளுவர் திறம்படக் கூறிய

நுண்ணிய நூல் பல கற்றும் மற்றுந்தன்

உண்மை அறிவே மிகும்

ஆம்? உண்மை அறிவே மிகுந்திருக்கிறது. புரட்சிக்கவிஞ ரின்படி, படி, நூலைப்படிஎன்ற வரிகளை உள் வாங்கியவர் அதனாலேயே சிந்தனையாளர் ஆகிறார்.

அறிஞர் எனில் எத்தனையோ அறிஞர் உண்டு. ஆயினும் பேரறிஞர் எனில் அண்ணா ஒருவரே. அதுபோல் சிந்தனையாளர் எனில் தந்தை பெரியார் தனித்தச் சிந்தனை யாளர் - யார் போட்டுத் தந்த தடத்திலும் நடை பயிலாத தனிச் சிந்தனையாளர்.

அந்தச் சிந்தனையாளரை மறுவாசிப்பு செய்கையில், அந்த சிந்தனையாளரைச் சுவாசிக்கையில், ஆம், அவரே பலமுறை குறிப்பிடுவது போல் பெரியாரை வாசிக்கிறதை விடச் சுவாசிக்கையில் புதிய சிந்தனை பிறக்கிறது.

பெரியார் திடலில் பகுத்தறிவாளர் கழகம். பகுத்தறிவு ஆசிரியர் அணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் ஆகியவற் றின் கலந்துரையாடல் கூட்டம் 21.11.2011 அன்று நடைபெற்ற போது தந்தை பெரியாரின் மூன்று நூல்களை - கரோனாவில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய சூழல் நேர்ந்தபோது மறுவாசிப்பு - அல்ல - அல்ல சுவாசிப்பு செய்தபோது அந்த மாமனிதரை நினைக்கின்றேன்  -அதிக வெளிச்சம் பரவியது! என சிலாகித்துக் கூறினார்.

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பதுபோல் ஒரு சிந்தனையாளருக்கே மாபெரும் சிந்தனையாளரை, அவரின் கருத்து ஆழத்தை, எண்ண அலைகளின் திரட்சியை உள்வாங்க முடிந்தது.

சிந்தனையாளர் என்னும் போது அந்த வரிசையில் சிலர்தான் நிற்பார்கள். ஆம்! மிக மிகச் சிலர்தான் நிற்பார்கள். மேதைகள் பலர் இருக்கலாம். மேதாவிகள் பலர் இருக்கலாம். மேன்மை தாங்கியோர்  பலர் இருக்கலாம். ஆனால், ஆனால் சிந்தனையாளர் எனில் சொற்பமே சிந்தனையாளர் என்பவர் எழுத்திலும், பேச்சிலும் மட்டுமல்லாது எந்தப் பக்கம் இருந்து எதிர்க் கணைகள் வந்தாலும் முனை மழுங்கச் செய்வதாக இருக்க வேண்டும். சட்டசபையில் கொடுப்பவருக்குத்தனிக்கேள்வி போடவும்எனப் பதில் அளிப்பவராக இராது, எதிரிகளின் முதுகெலும்பை முறிக்கும் பதில் அளிப்பவரே சிந்தனையாளர். உறங்கினாலும், விழித்தாலும் உள்ளம் சிந்திக்கவேண்டும். சிந்தனை ஊற்று வற்றாது சுரக்க வேண்டும்.

குதர்க்கமாகக் கோமாளித்தனமாக வக்கிரப்புத்தியோடு கேள்வி கேட்கும்சோக்களும் பாண்டேக்களும் பாச்சா பலிக்காமல் பதுங்கியதுண்டு. அத்தகு ஆற்றல் அய்யாவுக்கு உண்டு எனில் அவர்வழி பிறழாது நடை போடும் அய்யா வீரமணிக்கு இல்லாமல் போய்விடுமா?

கடவுள் இல்லை, இல்லைஎன்கிறீர்களே, கடவுள் உங்கள் எதிரில் வந்தால் என்ன செய்வீர்கள்?”

தந்தை பெரியாரிடம் புத்திசாலித் தனமாக தன்னை எண்ணி ஒருவர் கேட்ட கேள்வி!

கடவுள் இருக்கிறார் என்று ஏற்றுக்கொள்வேன்அவ்வளவுதான், கேள்வி கேட்டவர் கப்சிப் ஆனார்.

இப்படிப்பட்ட சிந்தனைத் திறமிக்க பதில்களே எந்த ஊடகவியலாளர் தெளிவு பெறவோ அல்லது தம்திறன் காட்டவோ,  ஏன் அதிக பிரசங்கித் தனமாகவோ கேட்டால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே பதில் அளிக்க வல்லவர் ஆசிரியர் வீரமணி என்பதால்தான் சிந்தனையாளர் ஆசிரியர் வீரமணி என்கிறோம்.

ஆட்சிக்கு வந்த ஏழு ஆண்டுகளில் ஒரு நாள் - ஒரே நாள் கூடப் பத்திரிக்கையாளரைச் சந்திக்காதமன்கிபாத்என்று கோடிக்கணக்கில் ஒரு வழிப்பாதையில் பயணிக்கும் மோடி போன்றோர் பிழைப்பும் ஓடுகிறது.

தலைவர் வீரமணி - தரம் குறையாத பதில்கள் சில அவர்தம் சிந்தனை ஆற்றலுக்கு - சாம்பிள்.

நெறியாளர்: திருவட்டாறு கோவிலுக்கு அமைச்சர் துரைமுருகன் சென்றபோது ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விமர்சித்தார். அமைச்சர் சேகர் பாபு செயல்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: ஆமாம் விமர்சித்தோம். ஆனால் இப்பொழுது அமைச்சர் சேகர் பாபுவுக்கு அதுதான் வேலை. கோவில்களில் சிலைகள் எல்லாம் இருக்கின்றனவா? நகை கள் எல்லாம் இருக்கின்றனவா? என்கிற கணக்கெடுக்கிறார்.

இத்துடன் நின்றிருந்தால் தமிழர் தலைவர் சிந்தனைத் திறன் வெளிப்பட்டிராது. மேலும் விளக்குகிறார்.

திராவிடர் கழகம் கூட அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர்  பயிற்சி கொடுத்து அர்ச்சகர் பணிக்கு அனுப்புங்கள் என்று ஏன் சொல்லுகிறோம்?

கொள்கை வேறு, உரிமை வேறு என்று பெரியார் தெளிவு படுத்தியிருக்கிறார்.

கடவுள் இல்லை என்று சொல்வது எங்கள் கொள்கை, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்பது உரிமை

இயல்பாகவே சிந்திக்கும் ஆற்றல் இருப்பினும் சிந்தனைத்திறன் மிகுந்திருப்பினும் படிக்க வேண்டும், படிக்க வேண்டும். படித்துக் கொண்டே இருக்க வேண்டும் எனும் தாகம் வேண்டும். அது இருக்கிறது நிறையவே இருக்கிறது. நாளிதழ்கள் கூட அவர் நற்பார்வைக்குத் தப்பவில்லை. ஆகையால் கும்பகோணம் நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் - ஏன்? எதற்கு? கருத்தரங்கத்தில் கூறுகிறார்.

பெரியாருடைய கருத்துக்கள் சொற்கள் இந்தியா முழுவதையும் மொழிகள் பல இருந்தாலும் - அந்த மொழி களை எல்லாம் தாண்டி மற்றவர்களுடைய சிந்தனைகளை அதுதான் தூண்டக் கூடிய அளவிற்கு, தீ வைத்து அது எரியக் கூடிய அளவிற்கு இருக்கிறதுஎன்று 1.10.2021 நாளில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் எடுத்துக் கூறுகிறதை சொல்கிறார்.

சமூகநீதிக்கு, ஜாதி ஒழிப்புக்கு, பெண் அடிமைக்கு எதிரான கருத்தைப் புதிய கோணத்தில் பார்க்கையில், கூறுகையில்சபாஷ் இந்த சிந்தனையாளர் வீரமணி என்று கரவொலி எழுப்புகிறோம்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்பது சமூகநீதி தானே - ஜாதி ஒழிப்புத் தானே - ஏன் பெண்கள் அர்ச்சகர் ஆகக்கூடாது என்று கேட்டாரே, அது பாலியல் நீதி, சமுகநீதி இவை அத்தனையையும் உள்ளடக்கியதல்லவா?

பெண்கள் அர்ச்சகர் ஆகலாமா? கூடாது என்னும் பழைமைவாதிக்கு - இந்தப் பதில் அமைச்சர் சேகர்பாபு விற்கே கூடத் தோன்றியிராது.

பெண்கள் கடவுளாக இருக்கலாம் - செல்வத்திற்கு யார் கடவுள், உன்னுடைய அர்த்தமுள்ள இந்து மதத்தில்? அமைச்சர்களுக்கு துறைகளைப் பங்கு பிரிப்பது போன்று தனித்தனி கடவுள்கள்.

செல்வமா? -  லட்சுமி

கல்விக்கு - சரஸ்வதி

வீரத்திற்கு - துர்க்கா தேவி

இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கடவுளை வைத்திருக்கிறார்கள் நம் நாட்டில்.

சரி, நீ எத்தனை கடவுள்களை வேண்டுமானாலும் வைத்துக்கொள். அது உன்னுடைய மனவியாதியைப் பொறுத்தது”.

அடுத்த கேள்விதான் சிந்தனையாளர் வீரமணி என்று காட்டும் கேள்வி.

அந்த ஒரு கேள்வி - பெண் கடவுள் இருக்கும்பொழுது ஏன் பெண் அர்ச்சகர் இருக்கக்கூடாது? - இதற்குப் பதில் சொல்ல வேண்டாமா?

திராவிடர் கழக இயக்க வெளியீடாக வந்துள்ள வெளியீடுஉயர் ஜாதியினருக்குப் பொருளாதார ரீதியிலான 10% இட ஒதுக்கீடு கூடாது - ஏன்? எனும் வெளியீடு, கடவுள் மறுப்பு, அனைத்துப் பிரிவினர் அர்ச்சகர் தொடர்பானவை - நீட் எதிர்ப்பு ஆகியவற்றில் மட்டுமல்லாது, ஒன்றிய அரசு உயர் ஜாதியினர் வாக்குகளைப் பெற்று, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் மண் அள் ளிப்போடும் மோசடியைத் தோல் உரித்துக் காட்டுவதிலும் தெளிவான எவரும் மறுக்க இயலாத, ஆமாம்! இவர் சொல்வது சரியாகத்தானே இருக்கிறது எனும் சிந்தனை வெளிப்படக் காண்கிறோம்.

இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல. பல ஆண்டுகளாகக் கல்வி, பணி வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூக ஊனம் (Socially handicapped) ஏற்பட்டவர்களுக்கு ஏற்படும் அநீதியைக் களையவே.

பசியேப்பக்காரனுக்குப் பந்தியில் முன்னுரிமை தர வேண்டிய அவசியம் போல - புளியேப்பக்காரனுக்குப் பந்தியில் இடம் தருதல் தேவையா?”

வறுமை ஒழிப்புத் திட்டங்களை அரசு வகுப்பதையும் அனைவருக்கும் அனைத்தும் தருவதையும் நாம் எதிர்ப்பதில்லை

ஒட்டகம் கூடாரத்திற்குள் தலைநீட்டுவது போன்ற ஆபத்தான தொடக்கம் இது என எச்சரிக்கிறார் பூசாரிக்கும், அர்ச்சகருக்கும் உள்ள வேறுபாட்டைச் சொல்கையில். சிந்தனையாளர் வீரமணியின் நகைச்சுவை முத்திரையையும், ‘பஞ்ச்'சையும் காண்கிறோம்.

காளியாத்தா கோயிலிலும், மாரியாத்தா கோயிலிலும் மணி அடிப்பவர் அர்ச்சகரா? அவருக்கு அர்ச்சகர் என்ற பெயர் உண்டா?

அவருடைய பெயர் பூசாரி என்கிறார்கள். நம்மாள் காளியாத்தா கோவிலில் இருந்தால்டேய்என்று அழைப்பார்கள். இவர்கள் அர்ச்சகர்களாக இருந்தால்சாமிஎன்பார்கள் இதில் வித்தியாசம் இருக்கிறதா? இல்லையா?

கோயில் கட்டியவர்கள் யார்? சிலையை வடித்தவர்கள் யார்? பெரிய மணியை நம் ஆட்களிடம் கொடுத்து விட்டார்கள். சின்ன மணியை அவன் வைத்துக்கொண்டான்.

பெரியார்தான் சொன்னார். மணி மாறட்டும் என்று. பெரியமணியை அவன் அடிக்கட்டும், சின்ன மணியை இவனிடம் கொடு என்றார்.

அந்த முள்ளை ஆம் அதுதான் பெரியார் நெஞ்சில் தைத்த முள். அதை அகற்றினார்கள், அதனாலேதான் முதலமைச்சர் மு.. ஸ்டாலின் சமூகநீதி சரித்திர நாயகர்!

- என்று சிந்தனை வளத்தோடு கூறினார்.

No comments:

Post a Comment