புதுடில்லி, டிச. 5 இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட 38 நாடு களுக்கு ஒமைக்ரான் பரவியுள்ள தாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இருந்த போதி லும், இந்த வைரசால் இதுவரை உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்பதால் மக்கள் பீதியடைய தேவையில்லை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் 24ஆம் தேதி புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருவதாக அந்நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து இஸ்ரேல், பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் இந்த வகை கரோனா பரவியிருப் பது தெரியவந்தது. இதுதொடர் பாக நடத்தப்பட்ட சோதனையில், இரண்டு முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களையும் இந்த வைரஸ் தாக்குவது கண்டறியப் பட்டது. இந்த வைரசுக்கு உலக சுகாதார நிறுவனம் ‘ஒமைக்ரான்’ எனப் பெயரிட்டது. முந்தைய கரோனா வகைகளை விட வேக மாக பரவுவதாலும், வீரியமிக்கதாக இருப்பதாலும் ஒமைக்ரானை ‘கவ லைக்குரிய வைரஸ்’ என உலக சுகா தார நிறுவனம் வகைப்படுத்தி யது.
இதனிடையே, உலக நாடுகள் பலவற்றில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தென்னாப்பிரிக்கா, நார்வே, பிரிட்டன், கானா ஆகிய நாடுகளில் இதன் பரவல் அதிக மாக உள்ளது. இந்தியாவை பொறுத்த வரை, இதுவரை 3 பேருக்கு ஒமைக் ரான் தொற்று உறுதியாகியுள்ளது. இந்த புதிய வகை கரோனா பர வலை கட்டுப்படுத்த இந்தியா உள் பட அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து உலக சுகாதார நிறுவனத் தின் (அவசரகால) இயக்குநர் மைக் கெல் ரயான் கூறியதாவது:
அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்தி ரேலியா, இந்தியா, நெதர்லாந்து, டென்மார்க், ஸ்பெயின், சுவிட்சர் லாந்து, ஜப்பான், சுவீடன் உட்பட 38 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் இருப்பது உறுதியாகியுள் ளது. எனினும், இந்த வைரசால் இதுவரை உயிரிழப்பு ஏதும் ஏற் பட்டதாக தரவுகள் கிடைக்க வில்லை. ஆனால், இப்போதைய சூழலில் கிடைக்கும் தகவல்களை கொண்டு எந்த முடிவுக்கும் நம் மால் வர முடியாது. சில வாரங்கள் கடந்த பிறகே, இந்த வைரஸ் எவ்வளவு வீரியமிக்கது; உயிரி ழப்பை ஏற்படுத்தக் கூடியதா; தடுப் பூசிகளுக்கு கட்டுப்படக் கூடியதா என்பது தெரியவரும். ஆனால், ஒமைக்ரான் பரவலின் வேகத்தை பார்க்கும் போது இன்னும் சில மாதங்களில் அய்ரோப்பாவில் பாதி மக்கள்தொகையை இந்த வைரஸ் தாக்கிவிடும் என தோன்று கிறது. எனவே, அனைத்து நாடுக ளையும் சேர்ந்த மக்கள் ஒமைக்ரான் பரவலில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு மைக்கெல் ரயான் கூறினார்.
No comments:
Post a Comment