இந்தியாவில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 27, 2021

இந்தியாவில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

புதுடில்லி,நவ.27- இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 235 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கடந்த 2019 நிலவரப்படி நாட்டின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 91.1 கோடியாக இருந்த நிலையில் தற்போது 2021 ஜனவரி நிலவரப்படி அதன் எண்ணிக்கை 93.4 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதில் 48. 3 கோடி வாக்காளர்கள் ஆண்களாகவும் 45.1 கோடி வாக்காளர்கள் பெண்கள் எனவும் கூறினார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நடைபெற்ற 17 பொதுத் தேர்தல்களில் ஆண்களை காட்டிலும் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளதாகவும், கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெண்களின் பங்களிப்பு 67 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் ஆண்களை விட பெண்கள் அதிகம் பங்கேற்ற முதல் பொதுத் தேர்தல் இது எனவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment