இனி தாங்க முடியாது இந்தத் துயரம்: விண்ணைத் தொடும் பெட்ரோல் விலை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 1, 2021

இனி தாங்க முடியாது இந்தத் துயரம்: விண்ணைத் தொடும் பெட்ரோல் விலை!

நாடு தழுவிய போராட்டம்!

லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை!

புதுடில்லி நவ.1- பெட்ரோல், டீசல் விலையை உடனடியாகக்  குறைக்காவிட்டால் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தப் போராட் டத்தில் ஈடுபடுவோம் என ஒன்றிய அரசுக்கு அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல் - டீசல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் பெட்ரோல் 115 ரூபாய்க்கு அதிகமாகவும், டீசல் 112 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதில் 70 சதவிகிதம் வரி வசூலிக்கப்படுகிறது. அடிப்படை விலையிலிருந்து பெட்ரோல் 275 சதவிகிதம் அதிகமாகவும், டீசல் 255 சதவிகிதம் அதிகமாகவும் விற்கப்படுகிறது.

கடந்த 37 நாள்களில் 29 முறை டீசல் விலையும், 26 முறை பெட்ரோல் விலை யும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயரும் அபாயம் எழுந்துள்ளது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தங்களது தொழில் பாதிக்கப் பட்டுள்ளதாகவும், எனவே, அதன் விலை களைக் குறைக்கவேண்டும் என்றும் அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இல்லையென்றால், நாடு தழுவிய அள வில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவேண்டிய நிலை ஏற்படும் என ஒன்றிய அரசுக்கு அந்த சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ராஜஸ்தானில் ரூ.121-க்கு விற்பனை

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து நான்காவது நாளாக உயர்ந்தது. அதிகபட்ச மாக ராஜஸ்தானின் கங்காநகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் 121.52 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

நம் நாட்டில் பெட்ரோல், டீசல் உள் ளிட்ட எரிபொருள்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இத னால் சாமானிய மக்கள் பெரும் சிரமத் திற்கு உள்ளாகி இருக்கின்றனர். கடந்த 25 ஆம் தேதி முதல், 27 ஆம் தேதி வரை இவற்றின் விலைகளில் மாற்றம் இல்லை.

தொடர்ந்து நான்காவது நாளாக...

எனினும் 28 ஆம் தேதி முதல், மீண்டும் அவற்றின் விலைகள் அதிகரிக்க துவங்கின. நாள்தோறும் 35 காசுகள் உயர்த்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து நான்காவது நாளாக நேற்றும் (31.10.2021) அவற்றின் விலை 35 காசுகள் உயர்ந்தன. நாட்டின் பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் டீசல் விலையும் 100 ரூபாயை கடந்துள்ளது.

மத்திய பிரதேசத்தின் பன்னா, சாட்னா, ரேவா, ஷாதுல், சிந்துவாரா, பாலாகாட் உள்ளிட்ட பகுதிகளிலும், ராஜஸ்தானின் கங்காநகர் மற்றும் ஹனுமன்கார்க் பகுதி களிலும் பெட்ரோல் விலை 120 ரூபாயை கடந்துள்ளது.

கங்காநகரில் 121.52 ரூபாய்க்கு பெட் ரோலும், 112.44 ரூபாய்க்கு டீசலும் விற் கப்படுகின்றன. நாட்டிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கப்படும் இட மாக கங்காநகர் உள்ளது.

துண்டறிக்கை

மத்திய பிரதேசத்தின் பல பகுதிகளில் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. இந்நிலையில், 120 ரூபாய்க்கு பெட்ரோல் விற்கப்படும் பாலா காட் பகுதியில், நேற்று செய்தித்தாளுடன் துண்டறிக்கை ஒன்று விநியோகிக்கப்பட்டது. அதில், பக்கத்து மாநிலமான மகாராட்டிராவின் கோண்டியா பகுதியில் பெட்ரோல், டீசல் விலை, 4 ரூபாய் குறைத்து விற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இது, அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment