மின்சார வாகன தயாரிப்பு : மோட்டார் நிறுவனம் ரூ.1,200 கோடி முதலீடு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 27, 2021

மின்சார வாகன தயாரிப்பு : மோட்டார் நிறுவனம் ரூ.1,200 கோடி முதலீடு!

கோவை, நவ. 27--  மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் எதிர்கால தொழில் நுட்பங்களுக்காக டி.வி.எஸ்., மோட் டார் நிறுவனம் அடுத்த நான்கு ஆண் டுகள் தமிழ்நாட்டில் ரூ.1,200 கோடி முதலீடு செய்யும் என அந்நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கோயம்புத்தூர் கொடிசியா வளா கத்தில் தொழில் துறை சார்பில்முத லீட்டாளர்களின் முதல் முகவரி "தமிழ்நாடு" என்ற முதலீட்டாளர்கள் மாநாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு நிறுவனங்களுடன் ரூ.35 ஆயிரம் கோடிக்கு மேல் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதில் டி.வி.எஸ்., நிறுவனத்தின் ரூ.1,200 கோடி முதலீடும் ஒன்று. மின்சார வாகன உற் பத்திக்காக இந்த முதலீட்டை அவர்கள் செய்ய இருக்கிறார்கள்.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது: இந்த முதலீடு மின்சார வாகன உற்பத்தி திறனை அதிகப்படுத்துவது மற்றும் புதிய தயாரிப்புகளின் வடிவ மைப்பு, மேம்பாடு, உற்பத்திக்காக செய் யப்படுகிறது. மின்சார பிராண்ட் மூலம் டி.வி.எஸ்., டிஜிட்டல் யுக நிறுவனமாக தன்னை மாற்றிக் கொள்கிறது. மின்சார வாகனங்கள், பசுமை எரிபொருள் போன்றவற்றில் தொழில்நுட்ப வளர்ச் சியை முன்னெடுப்பதற்கு நிறுவனம் உறுதிபூண்டுள்ளது.

மாநிலத்தின் மனித வளம், உள் கட்டமைப்பு மற்றும் ஒட்டுமொத்த வணிகச் சூழல் ஆகிய திறன் மீது உறு தியான நம்பிக்கையுடன் இந்த புரிந்து ணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் டி.வி.எஸ்., நிறுவனத்துடன் நேரடியாகவோ அல் லது மறைமுகமாகவோ தொடர்புடைய சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களும் பயனடையும். என கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment