பெண் கடவுள் இருக்கும்பொழுது, ஏன் பெண் அர்ச்சகர் இருக்கக்கூடாது? இதற்குப் பதில் சொல்ல வேண்டாமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 12, 2021

பெண் கடவுள் இருக்கும்பொழுது, ஏன் பெண் அர்ச்சகர் இருக்கக்கூடாது? இதற்குப் பதில் சொல்ல வேண்டாமா?

கும்பகோணம்: ‘நீட்தேர்வு ஒழிக்கப்படவேண்டும் - ஏன்? எதற்கு? கருத்தரங்கத்தில்

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் எழுப்பிய கேள்வி

கும்பகோணம், அக்.12  ‘‘உன்னுடைய அர்த்தமுள்ள இந்து மதத்தில் பெண் கடவுள் இருக்கும்பொழுது, ஏன் பெண் அர்ச்சகர் இருக்கக்கூடாது? இதற்குப் பதில் சொல்ல வேண்டாமா?'' என்று கேள்வி எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கடந்த 3.10.2021  அன்று காலை 10.30 மணியளவில்  கும்பகோணம் ராயாஸ் அனுக்கிரஹா மகாலில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்றநீட்' தேர்வு ஒழிக்கப்படவேண்டும் - ஏன்? எதற்கு? என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார். அவரது சிறப்புரை வருமாறு:

நீட்தேர்வு ஒழிக்கப்படவேண்டும் - ஏன்? எதற்கு?

பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய தோழர்களே, வரவேற்புரையாற்றிய கழக மாவட்டச் செயலாளர் அருமை நண்பர் துரைராஜ் அவர்களே, முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய கழகப் பொதுச்செயலாளர் இரா. ஜெயக்குமார் அவர்களே, மாநில அமைப்பாளர் இரா. குணசேகரன் அவர்களே, கழகக் காப்பாளர் ஜெயராமன் அவர்களே, தஞ்சை மண்டல தலைவர் அய்யனார் அவர்களே, மண்டல செயலாளர் குருசாமி அவர்களே, பொதுக் குழு உறுப்பினர் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் தாராசுரம் வை. இளங்கோவன் அவர்களே, குடந்தை மாவட்ட .. தலைவர் ஆடிட்டர் சண்முகம் அவர்களே,  பெருநகர தலைவர் கவுதமன் அவர்களே, செயலாளர் வழக்குரைஞர் பீ. இரமேஷ் அவர்களே, குடந்தை ஒன்றிய தலைவர் ஜில்ராஜ் அவர்களே, ஒன்றிய செயலாளர் கோவி. மகாலிங்கம் அவர்களே,

இங்கே நூல்களை வெளியிட்டு உரையாற்றிவிட்டு விடைபெற்றுச் சென்ற திராவிட முன்னேற்றக் கழக தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் சுயமரியாதை வீரர் சு.கல்யாணசுந்தரம் அவர்களே,

நூல்களைப் பெற்றுக்கொண்டு உரையாற்றிய மயி லாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் பெருமதிப்பிற்குரிய தோழர் செ.இராமலிங்கம் அவர்களே, தமிழ்நாடு அரசின் தலைமைக்   கொறடாவும், திரா விட இயக்கத்தின் ஏவு கணை கோவை.செழியன் அவர்களே, குடந்தை சட்ட மன்ற உறுப்பினர் அருமைத் தோழர் அன்பழகன் அவர் களே, காங்கிரஸ் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் டி.ஆர்.லோகநாதன் அவர்களே, தஞ்சை வடக்கு மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் மு.. பாரதி அவர்களே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் சா.விவேகானந்தன் அவர்களே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை பாண்டியன் அவர்களே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் இரா.முருகன் அவர்களே,

மற்றும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பாக உரையாற்றிய விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன் அவர்களே,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் ஆடுதுறை .எம்.ஷாஜஹான் அவர்களே, நீலப்புலிகள் கட்சித் தலைவர் .இளங்கோவன் அவர்களே, மனித நேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் பி..எஸ். ரஹமத் அலி அவர்களே, தமிழக வாழ்வுரிமைக் கட்சி யின் மாவட்டச் செயலாளர் தோழர் .செல்வம் அவர் களே, குடந்தை பெருநகர திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் சு..தமிழழகன் அவர்களே, குடந்தை ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் தோழர் அசோகன் அவர்களே, திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் தோழர் மோகன் அவர்களே,

மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் தோழர் குண சேகரன் அவர்களே, மே 17 இயக்க ஒருங்கிணைப் பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களே, தோழர் நாகை திருவள்ளுவன் அவர்களே, நன்றியுரை கூறவிருக்கக் கூடிய திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி தலைவர் .சிவக்குமார் அவர்களே,

சிறப்பாக இங்கே குழுமியிருக்கக்கூடிய அருமைச் சகோதரிகளே, தாய்மார்களே, பெரியோர்களே, கொள்கை உறவுகளே, ஒத்தக் கருத்துள்ள நண்பர்களே, ஏனைய சான்றோர்ப் பெருமக்களே உங்கள் அனை வருக்கும் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சியில் இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட்டன.  நம்முடைய பேராசிரியர் நம்.சீனிவாசன் அவர்கள் ‘‘கற்போம் பெரியாரியம்'' என்ற புத்தகத்தையும்,

கழகப் பொதுச்செயலாளர் மானமிகு டாக்டர் துரை. சந்திரசேகரன் அவர்கள் ‘‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை'' என்னும் புத்தகத்தைப்பற்றியும் சிறப்பாக எடுத்துரைத்திருக்கிறார்கள். அத்துணை  தோழர்களுக்கும் என்னுடைய அன்பான, பணிவான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘‘திராவிடம் வெல்லும்அதை நாளைய வரலாறு சொல்லும்‘’

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இதே குடந்தையில்தான், நம்முடைய இயக்கத்தின் பொதுக்குழு சிறப்பாக - ஒரு மாநாடுபோல நடைபெற்று, ‘‘திராவிடம் வெல்லும் - அதை நாளைய வரலாறு சொல்லும்'' என்ற தலைப்பிலே, முதன்முறையாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம். குடந்தை தீர்மானம்தான் இன் றைக்கு ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய ஒரு வரலாற்றை உருவாக்கியிருக்கிறது.

எனவே, அதே குடந்தையில்,  திராவிடர் ஆட்சி மலர்ந்து, ஒப்பற்ற சாதனைகளைச் செய்யக்கூடிய எல் லோரும் வியந்து பாராட்டக்கூடிய அளவிற்கு, எதிரிகள் கூட எந்த ஆயுதமும் கையில் கிடைக்கவில்லையே என்று நினைக்கக்கூடிய அளவிற்கு, சிறந்த முதல மைச்சராக இன்றைக்குத் திகழ்ந்து கொண்டிருக்கின்ற அருமைச் சகோதரர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு..ஸ்டாலின் அவர்களுடைய ஆட்சி - சிறப்பான ஆட்சியாக அமைவதற்கு, அடித்தளமிட்ட திராவிடர் கழகத்தினுடைய பொதுக்குழு கூடிய இடம் குடந்தை - ஆகவே, குடந்தைக்கு வேறு வேறு  பல சிறப்புகளைச் சொல்லலாம். ஆனால், குடந்தைதான், பல எழுச்சியை உருவாக்கியது.

குடந்தையில்தான் திராவிட மாணவர் கழகம் உருவாயிற்று

திராவிட மாணவர் கழகமே இங்கே இருக்கின்ற கல்லூரியில்தான் தொடங்கப்பட்டது. அதுவும், இரண்டு தண்ணர் பானைகள் இருந்த காரணத் தினால்தான், மாணவர் கழகமே உதயமானது.

ஜாதி, வருணாசிரம தர்மம் என்ற வந்த நேரத்தில், அதைவிட, இன்னொரு செய்தியை உங்களுக்குச் சொல்லியாகவேண்டுமானால், தமிழ் நாட்டினுடைய நீண்ட வரலாற்றை - சென்னையை விட்டுவிட்டு, எல்லா இடங்களையும் புரட்டிப் பார்த்தால், இந்தக் குடந்தையில் மட்டும்தான் அந்தக் காலத்தில், அரசினர் கல்லூரி உண்டு. திருச்சியில்  செயிண்ட் ஜோசப் கல்லூரி.

இங்கே ஒரே ஒரு கல்லூரி அரசினர் கல்லூரி. அந்தக் கல்லூரியில் பேராசிரியர்களாக, இளைஞர் களாக இருந்தவர்கள் யார்? படித்தவர்கள் யார்?

குடந்தையில்தான் திராவிட மாணவர் கழகம் உருவாயிற்று. எனவேதான், எங்கு நோய் இருக் கிறதோ, அங்கு மருத்துவர்கள் வருவார்கள்.

அதுபோல, ஜாதிக்கு சரியான மருந்து எது வென்றால், பெரியார் என்ற மாமருந்துதான் என்பதை எல்லோரும் இன்றைக்கு உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனுடைய அடிப்படை யில்தான், இந்த இயக்கம் இன்றைக்குத் தேவைப் படுகின்ற நேரத்தில், அருமையான இந்தப் புத்தக வெளியீட்டு விழாவிற்கு சிறப்பான  ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள்.

உடலால் மறைந்து, உணர்வால் நிறைந்திருக் கின்ற தந்தை பெரியார் அவர்களைப் பார்க்காத இரண்டு, மூன்று தலைமுறை வந்துவிட்டது.

இளைஞர் பட்டாளத்தினர் ஏராளமாய் வருகிறார்கள்

ஒரு 50 ஆண்டுகாலம் - அரை நூற்றாண்டு காலம் - அய்யா அவர்களைப்பற்றி இளைய தலைமுறையினருக்குத் தெரியாது. ஆனால், அவர்கள் அய்யா தந்த அறிவுச் சுடரை அணையாமல் காப்பது நாம் என்றால்,  அதை முன்னெடுத்துச் செல்வதற்கு, இதோ நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லி, இளைஞர் பட்டாளத்தினர் ஏராளமாய் வருகிறார்கள் என்பது - இதுதான் பெரியார் பெற்ற மிகப்பெரிய அடையாளம்.

கற்போம் பெரியாரியம் என்று சொல்லவேண்டிய அவசியம் என்னவென்று சொன்னால், இன்றைக்குப் பெரியார் தேவை - என்றைக்கும் தேவை.

ஒரு நோய்க்கு, மருந்தை கண்டுபிடித்த விஞ்ஞானி உயிரோடு இல்லாமல் இருக்கலாம் - ஆனால், அவர் கண்டுபிடித்த மருந்து எல்லோரையும் வாழ வைக்கும். இதுதானே வரலாறு.

அந்த வகையில்தான், மிக முக்கியமான அளவிற்கு, இன்றைக்கு அந்தக் கருத்துகள் ஏராளமாகப் பரவிக் கொண்டிருக்கின்றன. அதைப்பற்றியெல்லாம் நண்பர்கள் இங்கே சொன்னார்கள்.

நாங்கள் இதை வாதத்திற்காகவோ, வியாபாரத்திற் காகவோ செய்யவில்லை. கருத்துகள்தான் தேவை யானவை.

‘‘புத்தகங்கள் எவ்வளவு ரூபாய்க்கு விற்றன?’’

அய்யா அவர்கள் உரையாற்றும் கூட்டங்களில், மூத்திரச் சட்டி வாளியைத் தூக்கிக்கொண்டு, அந்த வலியைப் பொறுத்துக்கொண்டு இரண்டு, மூன்று மணி நேரம் உரையாற்றிவிட்டு, மூச்சு வாங்கக்கூடிய அளவில், வேன் புறப்படுவதற்கு முன்பாக எங்களைப் பார்த்து, ‘‘புத்தகங்கள் எவ்வளவு ரூபாய்க்கு விற்றது?'' என்று கேட்பார்.

இதைப் புதிதாகப் பார்ப்பவர்களுக்கு, ‘‘பெரியாருக்குப் பணத்தின்மீது ஆசை போல, ஆகவேதான், எவ்வளவு ரூபாய்க்குப் புத்தகங்கள் விற்றது'' என்று கேட்கிறாரோ என்று நினைப்பார்கள்.

அப்படியல்ல. அடுத்தபடியாக தந்தை பெரியார் சொல்லும்பொழுதுதான் அதனுடைய தத்துவம் புரியும். அய்யா அவர்கள் கூட்டத்தில் குறிப்பிட்டுப் பேசிய புத்தகத்தை வண்டி புறப்பட்டுச் செல்லும்பொழுது கேட்பார்கள். அதனுடைய விலை, நாலணா, எட்டணா தான் இருக்கும். அந்தப் புத்தகத்தை நாங்கள் கைகளில் தயாராக வைத்திருப்போம். தோழர்கள் கேட்கும்பொழுது கொடுப்போம். தந்தை பெரியார் அவர்கள் வண்டியை நிறுத்தச் சொல்வார். மற்ற நேரங்களில் அவசரப்படுத்தக் கூடியவர்; ஆனால், அப்பொழுது வண்டியை நிறுத்தச் சொல்லி புத்தகங்களைக் கொடுக்கச் சொல்வார்.

சரி, எவ்வளவு ரூபாய்க்கு விற்றது என்று கேட்பார் தந்தை பெரியார்.

200 ரூபாய்க்கு விற்றது அய்யா என்று நாங்கள் சொன்னவுடன்,

200 ரூபாய்க்கா? என்று ஆச்சரியப்படுவார். புத்த கத்தின் விலையெல்லாம் நாலணா, எட்டணாதான். 200 ரூபாய்க்கு விற்று இருக்கிறது என்றால், அவ்வளவு பேருக்கு நம்முடைய கருத்துப் போய் சேருகிறது என்றால், இந்தக் கூட்டத்தினுடைய வெற்றி மிகப்பெரிய வெற்றிதான் என்பார்.

ஒரு கூட்டத்தினுடைய வெற்றியை - அந்தக் கொள்கை  எந்த அளவிற்குப் போய்ச் சேருகிறது மக் கள் மத்தியில் என்பதற்கு அடையாளமாகப் பெரியார் பார்ப்பார்.

அதனால்தான், இன்றைக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு. நாங்கள் அந்தப் பணியை தொடருகிறோம்.

பெரியாருக்குப் பிறகு இயக்கம் இருக்காது - கொள்கை இருக்காது என்றார்கள்

பெரியாருக்குப் பிறகு என்ன இருக்கிறது என்று கேட்டார்கள். ஒன்றும் இருக்காது  - அவர் போய் விட்டால், ஒன்றும் இருக்காது - இயக்கம் இருக்காது - கொள்கை இருக்காது என்றார்கள்.

ஏனென்றால், இது ஒரு சாதாரண இயக்கம் - அந்த இயக்கத்தில் ஊருக்கு நான்கு வயதான கருப்புச்சட்டைக்காரர்கள் இருப்பார்கள் என்று சொன்னார்கள்.

ஆனால், அப்படி சொன்னவர்கள் எல்லாம் இன்றைக்கு சங்கடப்படக் கூடிய அளவிற்கு, நிம்மதிகள் இங்கே இருக்கிறார்கள். அதுதான் நமக்கு மகிழ்ச்சி.

‘‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’’ நாளேட்டில்...

‘‘டைம்ஸ் ஆஃப் இந்தியா'' ஆங்கில நாளேடு இந்தியா முழுவதும் பல பதிப்புகள் வரக்கூடிய நாளே டாகும். கடந்த 1.10.2021 அன்று வெளிவந்த அந்த நாளேட்டில் ஒரு செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள்.

‘‘Periyar’s words are igniting minds again across languages''

In Alangudi near Vamban, a village 20 km from Pudukkottai town, Periyar’s ‘Penn Yen Adimaiyaanal’ has become a talking point. The book is being discussed at tea stalls, workplaces and among friends, especially among women after free copies of the book were distributed by tea stall owner S Sivakumar on the 143rd birth anniversary of the social reformer.

For 34-year-old B Kalairani, a tailor, Periyar was a revered leader, but she had no idea about his writing. “This is the first time I am reading his book and I am astonished that he spoke about widow remarriage and equal rights for women 50 years ago. Many women in my neighbourhood have started to discuss his views on women’s rights,” says Kalairani.

Sivakumar has so far distributed 450 books in and around 20 villages. He wanted to distribute the books to celebrate the Tamil Nadu government’s announcement to observe Periyar’s birth anniversary as Social Justice Day.

Miles away, Chennai based publisher Kavignar Thambi set a sales target of one lakh copies of ‘Penn Yen Adimaiyanal’ on September 17, Periyar’s birth anniversary. “We received orders and sold beyond our target. About 1.2 lakh books were sold in a single day, with many buyers gifting it to students and villagers,” he said.

In the past five years, more people have turned to Periyar’s writings, say publishers, and it is across languages. V Kumaresan of Dravidar Kazhagam says Periyar’s writings on a wide range of topics such as atheism, women empowerment and casteless society have piqued the interest of readers.

Rajkamal Prakashan, a publication in Hindi, has come out with three volumes of Hindi translation of Periyar’s writing by Pramod Ranjan since July 2020. They are ‘Jati Vyasvstha aur Pitrisatta’, ‘Sacchi Ramayan’, and ‘Dharm aur Vishvadrishti’. These books were a hit among women and students belonging to marginalised sections of society in Bihar, Uttar Pradesh, Madhya Pradesh, Chhattisgarh, Rajasthan, and Delhi, said Pramod Ranjan. “Periyar is re-emerging as an icon among the younger generation in the Hindi heartland,” he said.

Ashok Maheshwari, managing director of Rajkamal Prakashan, plans to publish more such translations. “We feel that Periyar’s works should have been accessible to Hindi readers much earlier,” he said.

The trend began after 2014-2015, said Prabhakaran Alagarsamy of Periyar Books.in. “The monthly sale of books was around 60,000 in 2017. Now, it has touched 4 lakh. Nearly 80% of the books are on Periyar writings and thoughts, while the remaining are related to social justice and other social reformers such as Jothirao Phule. And many of them are young readers,” says the publisher who has received orders from Delhi for Periyar’s translations in Hindi. Periyar’s ‘Indrum and Endrum’, ‘Collected Works of Periyar’, ‘Rationalism Why? How?’, and ‘Pagutharivu Yen Etharku’ are among the popular books.

Suba Veerapandian of publishing house Karunchattai Pathipagam feels the words of Periyar remain relevant. A Korean University has approached Dravidar Kazhagam to translate Periyar’s writing, he said. “Periyar said that his biggest promoters were his critics. This is what has happened in the past few years. The more criticism he has drawn from the right wing, the more people want to know about him,” he said. Writer Gnana Aloysius concedes. To cater to the demand, he has started to translate articles published in ‘Kudiyarasu’ into English, and plans to publish it in 10 volumes.

‘‘பெரியாருடைய கருத்துகள், சொற்கள் இந்தியா முழுவதையும் மொழிகள் பல இருந்தாலும் - அந்த மொழிகளையெல்லாம் தாண்டி, மற்றவர்களுடைய சிந்தனைகளைத் அதுதான் தூண்டக் கூடிய அளவிற்கு,  தீ வைத்து அது எரியக்கூடிய அளவிற்கு - அந்தச் சுடரை உருவாக்கக் கூடிய அளவிற்கு இருக்கிறது'' என்றுடைம்ஸ் ஆஃப் இந்தியா'  செய்தி வெளியிட்டு இருக்கிறது.

இதை நாங்கள் சொல்லவில்லை. ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

பெண் ஏன் அடிமையானாள்?’

பெண் ஏன் அடிமையானாள்?' என்ற புத்தகம் அறந்தாங்கி ஆலங்குடி அதியமான் என்கிற இடத்தி லுள்ள ஒரு தேநீர்க் கடையில், தந்தை பெரியார் 143 ஆம் ஆண்டு பிறந்த நாள் - சமூகநீதி நாளில், சிவக்குமார் என்பவர் அந்தப் புத்தகங்களை வாங்கிக் கொடுக்கிறார். அதேபோன்று, தையல் பணி செய்யக்கூடிய 34 வயதான கலைராணி என்கிற பெண்மணி சொல்லும்பொழுது,

‘‘மரியாதைக்குரிய ஒரு தலைவர் தந்தை பெரியார். பெரியாரைப்பற்றி நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால், அவருடைய கருத்துகளை நான் படித்ததில்லை'' என்கிறார்.

இங்கே நம்முடைய பேராசிரியர் நம்.சீனிவாசன் சொன்னாரே, பெண் ஏன் அடிமையானாள்? அம்மாயி என்ற விதவைப் பெண்ணைப் பார்த்தால் கண்ணீர் விடவேண்டும். ‘‘மாமா, நான் திருமணம் வேண்டும் என்று கேட்டேனா?'' என்று. பெரியார் திரைப்படத்தில் கூட இந்தக் காட்சி மிக உருக்கமாக இருக்கும்.

இப்படி செய்துவிட்டார்களே என்று பெரியாரிடம் சொன்னபொழுது, ‘‘திட சித்தத்தோடு அவரைத் தூக்கி நிறுத்தினேன், மறுவாழ்வு கொடுப்பதென்ற முடிவோடு தூக்கி நிறுத்தினேன்'' என்றார்.

இன்றைக்கு 108 ஆண்டுகளுக்கு முன்னால், தன் னுடைய குடும்பத்தில் மறுமணம் செய்து வைத்து, விதவைத் திருமணத்தைப்பற்றி யோசிக்க முடியாத காலத்தில், செய்து வைத்தவர் தந்தை பெரியார்.

பெரியார் அவர்கள் தொடக்கத்திலிருந்து கடைசிவரையில் சமூகநீதிக்காகப் போராடினார்!

சிலர் புரியாமல் கேட்கிறார்கள், ‘‘பெரியார் மட்டும் தான் சமூகநீதிக்காகப் பாடுபட்டவரா? அவருடைய பிறந்த நாளை சமூகநீதி நாள் என்று அறிவிக்க வேண்டுமா?'' என்று கேட்கிறார்கள்.

பெரியார்தான் சமூகநீதியினுடைய தொடக்கம் என்று நாங்கள் சொல்லவில்லை. பெரியார்தான் சமூகநீதிப் புரட்சியாளர். மற்றவர்கள் அதைப்பற்றி பேசியிருப் பார்கள், எழுதியிருப்பார்கள், பாடியிருப்பார்கள், சில சம்பவங்கள் நடந்திருக்கும்.

பெரியார் அவர்கள் தொடக்கத்திலிருந்து கடைசி வரையில், அதற்காகவே வாழ்ந்தவர்கள். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்பது சமூகநீதிதானே - ஜாதி ஒழிப்புதானே!

பெண் கடவுள் இருக்கும்பொழுது,

ஏன் பெண் அர்ச்சகர் இருக்கக்கூடாது?

ஏன் பெண்கள் அர்ச்சகர் ஆகக்கூடாது என்று கேட் டாரே, அது பாலியல் நீதி, சமூகநீதி இவை அத்தனை யையும் உள்ளடக்கியதல்லவா?

இன்னுங்கேட்டால், நம்முடைய தாய்மார்கள், மற்ற வர்கள் மத்தியில் இந்தக் கருத்துகள் போய் சேர வேண்டும்.

பெண்கள் கடவுள்களாக இருக்கலாம் - செல்வத்திற்கு யார் கடவுள், உன்னுடைய அர்த்தமுள்ள இந்து மதத் தில்? அமைச்சர்களுக்குத் துறைகளைப் பிரிப்பது போன்று, தனித்தனி கடவுள்கள்.

செல்வமா? - லட்சுமி

ஆனால், லஷ்மி விலாஸ் வங்கி நட்டத்தில் போகும் - அதில் பணம் போட்டவர்கள் எல்லோரும் நம்பிக்கையில்லாமல் இருக்கிறார்கள். லஷ்மி விலாஸ் என்ற பெயரை நம்பித்தான் அதில் பணத்தைப் போட்டார்கள். லட்சுமி வீட்டிற்கு வருவாள் என்று. போட்ட பணமே காணாமல் போய்விட்டது. அந்தப் பணத்தைக் கொண்டு போய் மோடி வேறிடத்தில் கொடுத்துவிட்டார்.

கல்விக்கு? - சரசுவதி

கல்விக்குத் தனி கடவுள் இருக்கின்ற நாட்டில், கையெழுத்துப் போடக்கூடத் தெரியாதவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்.

வீரத்திற்கு? - துர்காதேவி

இப்படி ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கடவுளை வைத்திருக்கிறார்கள் நம்முடைய நாட்டில்.

சரி, நீ எத்தனை கடவுள்களை வேண்டுமானாலும் வைத்துக்கொள், அது உன்னுடைய மன வியாதியைப் பொறுத்தது.

ஆனால், ஒரே ஒரு கேள்வி - பெண் கடவுள் இருக்கும்பொழுது, ஏன் பெண் அர்ச்சகர் இருக்கக் கூடாது? இதற்குப் பதில் சொல்ல வேண்டாமா?

ஆகமம், ஆகமம் என்கிறார்களே, ஓங்கி அடித்தார் கலைஞர் அவர்கள்.  

(தொடரும்)

No comments:

Post a Comment