ஒற்றைப் பத்தி - ஆகம விதிகள்.. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 15, 2021

ஒற்றைப் பத்தி - ஆகம விதிகள்..

10 ரூபாய் தட்டில் போட்டால் பொட்டலமாக திருநீறு...

போடலைனா... வேண்டா வெறுப்பாக திருநீற்றைத் தூக்கிப் போடுதல்..

அது எந்த ஆகம விதியின்கீழ் வருது???

20 ரூபாய் தட்டில் போட்டால் இரு கண்ணி பூச்சரம்.

அதுவே 100 ரூபாய் தட்டில் போட்டால், சாமிக்கு சாத்தின மாலையை கையில் கொடுப்பது. அதுவே 200 ரூபாய் கொடுத்தால், கழுத்தில் மாலையாக போடுவது... இது எந்த ஆகம விதி???

அர்ச்சனை செய்யும்போது, அங்கொரு கண் - இங்கொரு கண்  - கூட்டம் எவ்வளவு இருக்கு, தட்டில் எவ்வளவு சேரும் என்ற நினைப்பில், மனம் ஒரு நிலையில் இல்லாமல் பணி செய்வதில் இறுமாப்பு.

இதுவும் ஆகம விதியா???

கர்ப்ப கிரக படியில் உட்கார்ந்து செல்போனை நோண்டுவது - இதுவும் ஆகம விதியா???

சாமி கும்பிட வந்த பெண்ணை கன்னத்தில் அடிப்பது.

இந்த ஆகம விதியை சொல்லிக் கொடுத்தது யார்?

கர்ப்ப கிரகத்தில் கலவி செயல் -

ஆகம விதியில் இதுவும் உண்டோ!!!

வடகலை - தென்கலைன்னு பாகுபாடு பார்த்து கோவிலிலேயே அடிதடி சண்டை.

இந்த சண்டை எந்த ஆகம விதி???

வைஷ்ணவர் தெருவில் சிவன் சப்பரம் ஊர்வலம் வந்தால், ஓடிப்போய் கதவை சாத்தும் செயல்...

இதுவும் ஆகம விதியா???

ஏனப்பா, செய்வதெல்லாம் பிக்காலி தனம் - பிராடு தனம்.

இதுல, ஆகம விதிதான் - வந்ததாக்கும்.

(முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது)

அனைத்து ஜாதியி னருக்கும் அர்ச்சகர் உரிமை என்றால், அய் யய்யோ, ஆகமம் கெட்டுக் குட்டிச் சுவராகிவிட்டதே! 'போச்சு, போச்சு! எல்லாம் போச்சு!' என்று வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் ஆரியப் பார்ப்பன வகை யறாக்கள் - முகநூலில் வெளிவந்துள்ள இந்தத் தகவல்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்களாம்?

பார்ப்பனர்களுக்கு எது வசதியோ, அதற் குப் பெயர் ஆகமம் - எது வசதி குறைவோ அது எல்லாம் அனாச் சாரம் - ஆகமம் - அப்படித் தானே!

 - மயிலாடன்

No comments:

Post a Comment