இந்தியா- தொடர்ந்து முன்னிலையோ முன்னிலை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 15, 2021

இந்தியா- தொடர்ந்து முன்னிலையோ முன்னிலை!

வறுமையிலும்-பசி பட்டினியிலும்

பாரீஸ், அக். 15 உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியா மொத்தமுள்ள 116 நாடுகளில் 101ஆவது இடத்தில் உள்ளது.

பசி தீவிரமானது என அடையாளம் காணப் பட்ட 31 நாடுகளில் இந்தியாவும் இணைந்துவிட் டது.  கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட உலகளா விய பசி குறியீட்டில் 107 நாடுகளில் இந்தியா 94ஆம் இடத்திலிருந்தது. தற்போதுள்ள பட்டி யலின்படி, இந்தியாவை விட 15 நாடுகள் மட்டுமே மோசமாக உள்ளன.

பப்புவா நியூ கினியா (102), ஆப்கானிஸ்தான் (103), நைஜீரியா (103), காங்கோ (105), மொசாம்பிக் (106), சியரா லியோன் (106), திமோர்-லெஸ்டே (108), ஹெய்தி (109), லைபீரியா (110) ), மடகாஸ்கர் (111), காங்கோ ஜனநாயக குடியரசு (112), சாட் (113), மத்திய ஆப்பிரிக்க குடியரசு (114), யமன் (115) மற்றும் சோமாலியா (116) ஆகியவைதான் நமக்கு பின்னால் இருக்கும் நாடுகளாகும்.

அண்டை நாடுகள் நம்மை விட பட்டினி நாடு கள் பட்டியலில் இருந்து மீண்டுள்ளன. பாகிஸ்தான் 92ஆவது இடத்திலும், நேபாளம் மற்றும் வங்க தேசம் 76ஆவது இடத்தையும் பகிர்ந்து கொண்டு உள்ளன.

2030ஆம் ஆண்டுக்குள் பசியற்ற சமூகம் உருவாக வேண்டும் என்ற இலக்கை நோக்கி, நாம் முன்னேற வேண்டியுள்ளது. சத்துணவுக் குறை பாடு, குழந்தைகள் வீணாக்குதல், குழந்தைகள் வளர்ச்சி குறைபாடு, குழந்தைகள் இறப்பு விகிதம் உள்ளிட்டவற்றை வைத்துப் பசி குறியீடு உரு வாக்கப்படுகிறது. இந்த வகையில் மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியா, இந்த பிரச்சினைகளைச் சரி செய்ய வேண்டிய தேவையுள்ளது.

இந்தியா   மோடி ஆட்சிக்கு வந்த 2014 இல் 55 ஆவது இடத்தில் இருந்தது, 2017 இல்  100 ஆவது இடத்திற்கும் 2018இல் 103 வது இடத்திற்கும்  2019 இல் 102 ஆவது இடத்திற்குமாக தொடர்ந்து சரிவைச் சந்தித்துள்ளது.

பட்டினி இல்லாத நாடுகள் என 18 நாடுகள் முதல் இடம் பிடித்துள்ளன. 1. பெலாரஸ் 2.போஸ் னியா 3. பிரேசில் 4. சிலி 5.சீனா 6.குரோசியா 7.கியூபா 8.எஸ்தோனியா 9.குவைத் 10.லாத்வியா 11.லிதுவேனியா 12.மான்டேனிகுரோ 13.வட மெக் டோனியா 14.ருமேனியா 15.செர்பியா 16.ஸ்லோ வேனியா 17.துருக்கி 18.உருகுவே  போன்ற நாடுகள் உள்ளன

இந்தப் பட்டியலில் சீனா, துருக்கி போன்ற வையும் இணைந்துள்ளன, காரணம் அவர்கள் உலகமயமாக்கலை  ஏற்றுக்கொண்ட போதிலும், அனைத்து அதிகாரங்களையும் அரசின் கைகளில் வைத்திருந்தனர்.  அரசின் சொத்துகளும், உற்பத் தியும், விநியோகமும் துருக்கி மற்றும்  சீனாவிடம் இருக்கிறது. உலகமயக் கொள்கையையும் தனது நாட்டு சட்டதிட்டங்களுக்கு உடன்பட்டு நடை முறைப்படுத்துகின்றனர்.

ஆனால் மோடி அரசை கார்ப்ரேட்களும், ஆர்.எஸ்.எஸ். போன்ற மதவாத அமைப்புகளும்  வழி நடத்துகிறார்கள். சமூகத்தின் சொத்துகள் தனியார் பெருமுதலாளிகளின் கைகளில் சிக்கிக் கிடக்கிறது. உலகமயக் கொள்கையினால் உலக நாடுகளின் வேட்டைக்காடாக இந்தியா மாறி இருக் கிறது. எனவே இங்கு பட்டினி தாண்டவமாடுகிறது.

No comments:

Post a Comment