தீபாவளியும் திராவிடர் கடமையும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 30, 2021

தீபாவளியும் திராவிடர் கடமையும்

 தீபாவளி கதை தொகுத்த காலத்தில், ஆரியர்கள். அவ்வளவு காட்டுமிராண்டிகளாகவும். அவ்வ ளவு மானாவமானக் கவலையற்ற மிருகவாழ்வு வாழ்ந்தவர்களாகவும் இருந்திருக்கலாம் என்பதாகக் கொள் ளலாம். என்றாலும். இக்காலத்திலுள்ள ஆரியர்களும்; அதாவது. எவ்வ ளவோ விஞ்ஞான அறிவு. பகுத்தறிவு, மான உணர்ச்சி கொண்ட இக்கால ஆரியர்களும், இந்த, இதுபோன்ற ஆபாசக் கதைகளைக் காப்பாற்றி பிர சாரம் செய்து. மக்களையும் அவற்றை நம்பி நடக்கும்படி செய்கிறார்கள் என்றால், நம் மக்கள் நிலை அதைவிட காட்டுமிராண்டித்தனமானதும் மானாவமான லட்சியமற்றதும். மிருகப் பிராயத்திலிருப்பதும், அல்லது அப்படியெல்லாம் இருப்பதாக அவர் கள் கருதி இருப்பதாகவாவது இருக் கலாம். எப்படி இருந்தாலும், இனியா வது பகுத்தறிவோடு. மான உணர்ச்சி யோடு, சிந்திக்க வேண்டியது திரா விடர் கடமையாகும்   -தந்தை பெரியார்.

No comments:

Post a Comment