சங்கராச்சாரியாரை மறந்தது ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 3, 2021

சங்கராச்சாரியாரை மறந்தது ஏன்?

கேள்வி: காந்தி, நேரு, .வெ.ரா, அண்ணாதுரை, கருணாநிதி, மோடி போன்ற தலைவர்களைப் பற்றி குற்றம் குறை சொல்லும் புத்தகங்கள் உள்ளன. அம்பேத்கரைப் பற்றி அது மாதிரி ஒன்று கூடவா இல்லை?

பதில்: அம்பேத்கரைப் பற்றி எதிர்மறையாக அருண்ஷோரி  "Worshiping Fase gods" என்ற தலைப்பில் கடுமையான புத்தகம் ஒன்றை எழுதினார். அதை எதிர்த்துப் போராட்டங்கள் நடந் தன. அந்தப் புத்தகம் பல இடங்களில் எரிக் கப்பட்டது "புத்தகங்கள் எரிப்பதற்கல்ல!" என்கிற தலைப்பில் 'எகனாமிக் டைம்ஸ்' பத்திரிகையில் சுவாமிநாதன், அங்கிலே சரியா அய்யர் கட்டுரை கூட எழுதினர்.

'துக்ளக்' 6.10.2021 பக்கம் 31

பார்ப்பனர்களுக்கு எந்தெந்த தலைவர்கள் மீதெல்லாம் முரட்டுத்தன மான குறி பார்த்தேளா!

அண்ணல் அம்பேத் கர் பற்றி எதிர் கருத்துக்கள் வர வேண்டும் என்பதில் எத்தகைய 'ஆர்வவெறி!'

அண்ணல் அம்பேத் கர்பற்றி அவதூறாக அருண்ஷோரி எழுதிய நூல்பற்றி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் இருநாள்கள் அக்குவேர் ஆணி வேராக அலசி உரையாற்றியதுண்டே! (30.7.1997, 5.8.1997 இரு நாள்கள்).

இந்தச் செய்தி தெரி யுமா 'துக்ளக்' பார்ப்பனக் கும்பலுக்கு?

குருமூர்த்தி வட்டாரத் தின் குலாதிபதி காஞ்சி சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திரர்பற்றி யும், காஞ்சி மடம் மோசடி குறித்தும்  நூல்கள் வெளி வந்துள்ளனவே - அவை குறித்து மூச்சு விடாதது ஏன்?

மதுரை  - அனைத் திந்திய பகவத்பாத சிஷ்யர்கள் சபையால் 'தக்ஷிணாம் நாய பீடம் சிருங்கேரியா? காஞ்சியா?' எனும் நூல் வெளியிடப்பட்டுள்ளதே!

காஞ்சி மடமே மோசடி என்கிறபோது சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திரரின் கதையே கந்தலாகி விடவில்லையா?

காஞ்சி வரதராச பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் (பிறகு அக்கோயிலிலேயே பட்டப் பகலில் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலைக் குற்றத் தில்தான் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் சிறையில் கம்பி எண்ணியதுண்டே!) ஜெயேந்திரரின் காம லீலைகளை வண்டி வண்டியாகக் கப்பல் ஏற்றவில்லையா?

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்

கி. வீரமணி அவர்களின் "சங்கராச்சாரி-யார்?" நூலுக்கு இதுவரை பதில் உண்டா?

பார்ப்பனர் அல்லாத தலைவர்களைக் கொச்சைப்படுத்துவது தொடருமேயானால் பார்ப்பனர்களின் மூலக் குருக்களின் மூலமான சங்கதிகள் வெட்ட வெளிச்சமாகும் - எச்சரிக்கை!

-  மயிலாடன்

No comments:

Post a Comment