ஒற்றைப் பத்தி - ‘துக்ளக்' - சுடுகாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 7, 2021

ஒற்றைப் பத்தி - ‘துக்ளக்' - சுடுகாடு

கேள்வி: 'ஜாதி வேறு பாடுகளைக் களையும் வகை யில் ஒரே மயானத்தைப் பின்பற்றும் கிராமங்களுக்கு, 10 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும்' என்று முதல்வர் மு..ஸ்டா லின் அறிவிப்பு குறித்து?

பதில்: சுடுகாட்டிலாவது ஜாதி ஒழியுமா என்று பரி சோதனை செய்ய ஊக்கத் தொகை கொடுக்கும் அள வுக்கு நலிந்துவிட்டது - ஜாதியை ஒழிக்கப் புறப்பட்ட திராவிடம்.

'துக்ளக்', 6.10.2021

'ஜாதியை ஒழிக்கப் புறப்பட்ட திராவிடம்' என் பதையாவது இவ்வளவுக் காலத்துக்குப் பிறகாவது ஒப்புக்கொள்ளும் அளவுக்கு புத்தி சுவாதீனத்திலிருந்து விடுபட்டு இருப்பது மகிழ்ச் சியே!

'துக்ளக்'கின் இந்தப் பதில் எதைக் காட்டுகிறது?' திராவிடம் என்றால், ஜாதி ஒழிப்பு; ஆரியம் என்றால், ஜாதி பாதுகாப்பு என்பது வெளிப்படவில்லையா?

சுடுகாட்டில்கூட ஜாதி இருப்பதுபற்றி 'துக்ளக்' கும்பலின் கருத்து இதுதான் என்பது தெளிவாகிறது.

தண்டத்தை விட்டு விட்டு மடத்திலிருந்து மர்மமான முறையில் இர வோடு இரவாக ஓடினாரே (அதற்குள் சென்றால் அநாகரிகம்) அந்த சங்க ராச்சாரியார் என்ன சொன் னார் தெரியுமா?

எல்லா வகுப்பினருக்கும் ஒரே வகையான எரிப்புமுறையைக் கடைப்பிடிக்காததால் எல்லோருக்கும் ஒரே சுடுகாடு என்பதை ஏற்க முடியாது என்று சொல்ல வில்லையா? மின் சுடுகாடு ஹிந்து மதத்துக்கு விரோதமானது என்றும் கூறினாரே! மதுரையில்தான் இவ்வாறு பேசினார். பார்ப்பனர்கள் இதனைக் கடைப்பிடிக்கிறார்களா என்பது சுவையான கேள்வி. அப்பொழுதே 'விடுதலை' (8.3.1982, பக்கம் 1) அம்பலப் படுத்தியதுண்டே!

திலகர் இறந்தபோது, அவர் பாடையைத் தானும் சுமக்கவேண்டும் என்று விரும்பி, பக்கத்தில் சென்ற காந்தியார் தடுக்கப் படவில்லையா? ஒரு 'பிராமணன்' உடலை ஒரு வைசியனோ, சூத்திரனோ தொடக்கூடாது என்று காந்தியார் விடயத்திலேயே நடந்ததுண்டே!

மனுதர்மம் சொல்லு வதும் அதுதான்.

''பிராமணன்'' முதலானோர் இறந்தால் அந்த ஜாதியார் இருக்கும்போது, சூத் திரனைக் கொண்டு அப்பிணத்தை எடுக்கச் சொல்லக்கூடாது. அப்படி எடுத்து தகனஞ்செய்தால் இறந்தவனுக்கு புண்ணிய லோகம் வராது.''

- மனுதர்மம் 5 ஆவது அத்தியாம்,

104 ஆவது சுலோகம்.

இப்படிப்பட்ட 'துக்ளக்' கூட்டம்தான் ஏதோ மனிதர்போல தங்களைக் காட்டிக் கொள்கிறார்கள், அவ்வளவுதான்!

புரிந்துகொள்வீர்!

 - மயிலாடன்

No comments:

Post a Comment