மோடி ஜனநாயகவாதி என்பது மிகச்சிறந்த நகைச்சுவை டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 11, 2021

மோடி ஜனநாயகவாதி என்பது மிகச்சிறந்த நகைச்சுவை டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவா

புதுடில்லி. அக் 11- உலகின் மிகச்சிறந்த ஜனநாயகவாதி மோடி என்று அமித்ஷா கூறியதை உலகின் முன் னணி டென்னிஸ் வீராங்கனையான மார்ட்டினா நவரத்திலோவா, மோடியை சிறந்த ஜனநாயகவாதி என்று கூறுவது மிகச்சிறந்த நகைச் சுவை, மறைமுகமாக கேலி செய் வது போலுள்ளது என்று கூறியுள் ளார்.

குஜராத் முதலமைச்சராக மோடி பதவியேற்று 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை பாஜகவினர் கொண்டாடிவருகின்றனர். ஊட கங்களில் முதல்பக்க விளம்பரம் முதல் தொலைக்காட்சிகளில் குறும்படம் போல் விளம்பரங்கள் செய்துவருகின்றனர். இதற்காக பல கோடி ரூபாய்களை பாஜக மறைமுகமாக கொடுத்து வருகிறது.

இந்த வெற்று விளம்பரத்தின் ஒரு பகுதியாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரதமர் மோடி குறித்து கூறும்போது, அமைச்சரவையிலும், நாடாளுமன்றத்திலும் அனைவ ரின் பேச்சையும் அமைதியாகக் கேட்டு அவர்களுக்கு உரிய மரி யாதையுடன் நடத்துபவர் மோடி என்று கூறினார்.

மேலும் அரசியலில் இவரைப் பிடிக்காதவர்கள் தான் இவரை சர் வாதிகாரி போல் சித்தரிக்கின்றனர், ஆனால் பிரதமர் மோடி சர்வாதி காரி அல்ல, ஜனநாயகத்தை பேணிக் காப்பவர் என்றும் கூறினார். சமூக வலைதளத்தில் மோடியின் இந்தப் பேச்சை ஆயிரக்கணக்கானோர் விமர்சித்து வருகின்றனர்.

இது குறித்து தனது கட்டுரைப் பக்கத்தில், உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை மார்டினா நவரத்திலோவாஇது மிகவும் நகைச்சுவையாக உள்ளதுஎன்று பதிவிட்டுள்ளார்.

1980 களில் மிக பிரபலமாக விளங்கிய அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான மார்டினா நவரத்திலோவா-வின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைர லாகி வருகிறது.

No comments:

Post a Comment