பகுத்தறிவாளர் கழக முக்கிய பொறுப்பாளர் வெண்கரும்பூர் ஆசிரியர் க.நாராயணசாமி மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 29, 2021

பகுத்தறிவாளர் கழக முக்கிய பொறுப்பாளர் வெண்கரும்பூர் ஆசிரியர் க.நாராயணசாமி மறைவு

கழகத் தலைவர் இரங்கல், வீரவணக்கம்

பெண்ணாடம் பகுதியில் சீரிய பகுத்தறிவு ஆசிரியராகத் திகழ்ந்தவரும், பண்பாளரு மான தோழர் மானமிகு .நாராயணசாமி

(வயது 87) அவர்கள் மறைந்தார் (28.10.2021) என்று அறிந்து மிகவும் துயரமும், வருத்தமும் அடைகிறோம்.

சிறப்பான வகையில் நல்லாசிரியராகத் தொண்டு புரிந்த  அவர் ஒரு பகுத்தறிவு  நெறியாளராக இறுதிவரை திகழ்ந்தவர்.

சில வாரங்களுக்கு முன்புகூட அவரிடம் தொலைப்பேசியில் நலம் விசாரித்தேன். அவரது மறைவு பகுத்தறிவாளர்களுக்கு மிகப் பெரிய இழப்பு ஆகும்.

அவரது பிரிவால் வருந்தி  துயருறும் அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவருக்கு நமது வீர வணக்கம்.


கி.வீரமணி

புரவலர்,

பகுத்தறிவாளர் கழகம்

சென்னை

29-10-2021

குறிப்பு: அவருடைய மகனிடம் தொலைப்பேசியில் ஆறுதல் கூறினோம். தோழர் இளந்திரையன் உடனிருந்தார்.

No comments:

Post a Comment