அகமதாபாத், அக்.3 குஜராத் ரியல் எஸ்டேட் நிறுவனம் கணக்கில் வராமல் 500 கோடி ரூபாய் கறுப்பு பணம் பதுக்கியது, வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட் டுள்ள நிறுவனம், கணக்கில் வராத பரிவர்த்தனைகள் நடத்துவதாக தகவல் கிடைத்தது.அகமதாபாதில் உள்ள அந்நிறுவனத்தின் 22 அலு வலகங்களில், வருமான வரித்துறையினர் சமீபத்தில் தீவிர சோதனை நடத்தினர். இதன் வாயிலாக கணக்கில் வராத 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான கறுப்பு பணம் கண்டறியப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: அகமதா பாதில் உள்ள பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம், கணக்கில் காட்டாமல் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிலத்தில் முதலீடு செய்துள்ளது. நிலம் விற்பனை வாயிலாக கிடைத்த 100 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையை மறைத்து உள்ளது. நில பேரம் வாயிலாக 230 கோடி ரூபாய்க்கும் மேல் பரிவர்த் தனைகள் தரகர்கள் வாயிலாக நடந்துள்ளன.
இதன்படி கணக்கில் வராத 500 கோடி ரூபாய்க்கும் மேல் கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டு உள் ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment