அட்லாண்டா, அக். 11- அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா நகரில் சாம்பிலீ கவுன்டி பகுதியில் உள்ள தெகால்ப்-பீச்ட்ரீ விமான நிலையத்தில் இருந்து செஸ்னா 210 ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது.
அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென தீப்பிடித்து உள்ளது. இந்த விமான விபத்தில் விமானி உள்பட 4 பேர் உயிரிழந்து உள்ளனர். விபத்திற்கான காரணம் பற்றி எதுவும் தெரிய வரவில்லை.
இதனை தொடர்ந்து தகவல் அறிந்து 15 தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணி யில் ஈடுபட்டனர். இந்த விபத்து பற்றி தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்த உள்ளது.
அமெரிக்க கடற்படை தளபதி இந்தியா வருகை
வாசிங்டன், அக். 11- அமெரிக்க கடற்படை தளபதி மைக் கில்டே இந்த வாரம் இந்தியா வருகிறார். இந்த பயணத்தின் போது இந்திய கடற்படை தளபதி கரம்பிர் சிங் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடனும், அரசு அதிகாரிகளுடனும் அவர் சந்திப்புகளை நடத்துகிறார். இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையே வளர்ந்து வரும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இந்த பயணம் நடப்பதாக அமெரிக்க கடற்படை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
'கிரீன் கார்டு' தாமதத்தை தவிர்க்க உத்தரவு
வாசிங்டன், அக். 11- அமெரிக்காவில் 'கிரீன் கார்டு' வழங்கு வதில் தாமதத்தை தவிர்க்கும்படி, அதிகாரிகளுக்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் வெளிநாட்டினர் நிரந்தரமாக தங்குவ தற்கு 'கிரீன் கார்டு' பெற வேண்டும். ஆண்டுதோறும் ஒவ் வொரு நாட்டுக்கும் 7 சதவீதம் மட்டுமே கிரீன் கார்டுகளை அமெரிக்க குடியேற்றத்துறை வழங்கி வருகிறது. அமெரிக் காவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இந் தியர்கள் பலர் 'எச் பி' விசா பெற்று, பணியாற்றி வருகின்றனர்.இவர்களில் பலர் கிரீன் கார்டு கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாக்கி கூறியதாவது: கிரீன் கார்டு வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் உலகம் முழுதும் உள்ள திறமை மிக்க பணியாளர்களை பயன்படுத்திக் கொள்வது தடைபட்டுள்ளது. அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சியில் கிரீன் கார்டு வழங்குவதில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இப்போது நீக்கப்பட்டு விட்டன. அதனால் கிரீன் கார்டு வழங்குவதில் தாமதத்தை தவிர்க்க வேண்டும் என, அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். எனவே கிரீன் கார்டு வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்க அதிபர் பைடனின் உத்தரவு அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களுக்கு மகிழச்சியை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment