தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் முடிவு
சென்னை, அக்.7- தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் சென்னை சைதாப்பேட்டையில் செயல்பட்டு வருகிறது. இங்கு, அறிவியல், கணிதம் உள்ளிட்ட 21 படிப்புகள் உள்பட 130 இளநிலை, முதுநிலைப் பட்டம், பட்டயம் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் தொலைநிலை வழியில் கற்றுத் தரப்படுகின்றன. இவற்றில் மொத்தம் 28,957 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். இதற்கிடையே, தொலைநிலைக் கல்வியின் மேம்பாட்டுக்கு, உயர்கல்வித் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நடப்பு கல்வியாண்டு முதல் தமிழ் வழிப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு 25 சதவிகிதம் வரை கல்விக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும். இதர படிப்புகளில் சேரும் ஏழை, எளிய மாணவர்களுக்கு 5 முதல் 10 சதவிகிதம் வரை சலுகை வழங்குவது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம் என்று பல்கலைப் பேராசிரியர்கள் கூறினர்.
No comments:
Post a Comment