டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் ரயில் மூலம் டில்லி பயணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 13, 2021

டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் ரயில் மூலம் டில்லி பயணம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி வழியனுப்பியது

சென்னை, ஆக.13 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி டில்லி யில் விவசாயிகள் கடந்த 8 மாதங் களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின் றனர்.

இந்த நிலையில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதி களில் இருந்து விவசாயிகள் டில்லிக்கு புறப்பட்டு சென்று கொண்டு இருக்கின்றனர். இதன் ஒரு கட்டமாக, சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று (12.8.2021) மாலை ரயில் மூலம் புறப்பட்டு செல்ல இருந்த தமிழ்நாடு விவசாயிகளை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வழி அனுப்பி வைத்தது. இதற்கான நிகழ்ச்சி சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே நடந்தது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செய லாளர் முத்தரசன் தலைமை தாங்கினார்.

வழியனுப்பும் நிகழ்ச்சியில் முத்தரசன் பேசுகையில், வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். அப்படி திரும்ப பெறாவிட்டால், மோடி அர சாங்கத்தை இந்த நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். ஒன்றிய அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருதாமல், கார்ப்பரேட் கம்பெனி முதலாளி களுக்கு ஆதரவாக செயல்படு கிறது. இந்த நிலை மாறவேண்டும். வேளாண் சட்டங்களை நீக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இந்த போராட்டம் விரிவடைந்து அடுத்தக்கட்ட எல்லைகளை கடக்கும், என்றார். அதனைத்தொடர்ந்து விவசாயிகள் ரயில் மூலம் டில்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

No comments:

Post a Comment