அறிகுறிகளை காட்டாத கருப்பைப் புற்றுநோய் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 31, 2021

அறிகுறிகளை காட்டாத கருப்பைப் புற்றுநோய்

இந்தியாவில் 8 நிமிடங்களுக்கு ஒருமுறை கருப்பை வாய்ப் புற்றுநோயால் ஒரு பெண் உயிரிழப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 2.80 லட்சம் பெண்கள் உயிரிழக்கின்றனர்.

மார்பகப் புற்றுநோய் போல பெண்களுக்கு மற்றொரு அச்சுறுத்தல் இந்த கருப்பை புற்று நோய். மார்பக புற்றுநோயை அடுத்து கருப்பை புற்றுநோயும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கருப்பை புற்றுநோய் பாதிக்கும் பெண்களின் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கருப்பை புற்றுநோய், கருப்பைப் வாய் புற்றுநோய், கருமுட்டையில் இருந்து உருவாகும் புற்றுநோய் என மூன்று விதமான புற்றுநோய் கருப்பையை பாதிக்க வாய்ப்புள்ளது.

இதில் கருப்பை வாய் புற்றுநோய் நகர்புற பெண்களை விட, கிராமப்புற பெண்களை தான் அதிகம் தாக்குகிறது. இந்தியாவில் 8 நிமிடங்களுக்கு ஒருமுறை கருப்பை வாய்ப் புற்றுநோயால் ஒரு பெண் உயிரிழப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 2.80 லட்சம் பெண்கள் உயிரிழக்கின்றனர். பெண்களின் பிறப்புறுப்பில் இருந்து கருப்பைக்கு செல்லும் பாதையில் செல்களின் வளர்ச்சி அளவுக்கு அதிகமாக இருக்கும் போது அது புற்றுநோயாக மாறுகிறது.

இந்த கருப்பைப் புற்றுநோய் பெரிய அறிகுறிகளை காட்டாது. அதனால் தான் உயிரிழப்புகள் அதிகமாகிறது. மார்பகப் புற்றுநோய் போல தான் கருப்பைப் புற்றுநோயையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் குணப்படுத்திவிடலாம்.


No comments:

Post a Comment