முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 1, 2021

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை

 ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு..ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை, ஆக.1 அரசுப் பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னு ரிமை தர வேண்டும் என்று முதலமைச்சர் மு.. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (31.7.2021) முதலமைச்சர் மு.. ஸ்டாலின் தலைமையில் மனிதவள மேலாண் மத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில், அரசு அலுவலர்களுக்குச் சிறப்பான பயிற்சிகளை அளிப்பதன் மூலம் அவர்களது பணித்திறனை மேம்படுத்தி, மக்கள் பயன் பெறும் வகையில் சேவைகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத் தினார்.

போட்டித் தேர்வுகளில் தமிழ்நாடு மாநில மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறும் வகையில் பல்வேறு சிறப்புப் பயிற்சிகளை வடிவமைத்து, அரசு பயிற்சி நிலையங்கள் மூலம் வழங்க வேண்டும், தமிழ் நாடு மாணவர்களிடையே ஒன்றிய மாநில அரசுப் பணிகள் தொடர்பான போட் டித் தேர்வுகள், தகுதிகள், தேவையான பயிற்சிகள் குறித்த விழிப்புணர்வை முதலில் ஏற் படுத்த வேண்டும்.

குடும்பத்தில் முதல் தலை முறைப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பகங்கள் மூலம் அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும், தகவல் பெறும் உரிமைச் சட் டத்தின்கீழ் அனைத்துதுறை களிடமும் இணையதளம் மூலம் தகவல் பெறும் வசதி களை மேம்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத் தினார்.

அரசு அலுவலர்களின் மனிதவள ஆற்றலை மேம்படுத் தவும், தமிழ்நாடு இளைஞர் களின் அரசு வேலைவாய்ப்பு களை அதிகரிக்க வேண்டும், அண்ணா மேலாண்மைபயிற்சி மய்யம், போட்டித் தேர்வுப் பயிற்சி மய்யங்களின் செயல்பாடுகள், கட்டமைப்பு களை உயர்த்த வேண்டும்.

பவானிசாகரில் உள்ள அடிப்படைப் பயிற்சி மையத் தில் அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியை இணைய வழி பயிற்சியாக அறி முகப்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

நிதி, மனிதவள மேலாண் மைத்துறை அமைச்சர் பழனி வேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நிதித்துறைச் செயலாளர் .கிருஷ்ணன், மனிதவள மேலாண்மைத் துறைச் செய லாளர் மைதிலி கே.ராஜேந்திரன் உள்ளிட் டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment