உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் கிணறு தோண்டும்போது கண்டெடுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 31, 2021

உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் கிணறு தோண்டும்போது கண்டெடுப்பு

கொழும்பு, ஜூலை 31- உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் தொகுப்பு, இலங் கையில் ஒரு வீட்டில் கிணறு தோண்டும்போது கிடைத்ததாக அதிகாரி கள் தெரிவித்தனர்.

இலங்கையின் ரத்தின புரி பகுதியில் ரத்தினங்கள் அதிகம் காணப்படுகின் றன. இதனால் இப்பகுதி ரத்தின தலைநகரம் என வும் அழைக்கப்படுகிறது. இங்கு வசிக்கும் கமாகே என்ற ரத்தின வியாபாரி யின் வீட்டின் பின்புறம் கிணறு தோண்டும் பணி யில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது தற்செயலாக மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் தொகுப்பு கிடைத்து. இது 510 கிலோ அல்லது 25 லட்சம் காரட் எடை கொண்ட தாக உள்ளது. வெளிர் ஊதா நிறத்தில் உள்ள இந்தக் கல் பன்னாட்டு சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பில் 745 கோடி இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மூன்றாம் தலைமுறை ரத்தின வியாபாரியான கமாகே கூறும்போது, “கிணறு தோண்டும்போது அரிதான கல் கிடைத்துள் ளதாக தொழிலாளர்கள் கூறினர். பிறகு அதைக் கண்டு நாங்கள் வியந்து போனோம்என்றார்.

No comments:

Post a Comment