சென்னை விமான நிலையத்தில் காமராஜர், அண்ணா பெயர்ப் பலகைகள் மீண்டும் பொருத்தப்படுமாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 31, 2021

சென்னை விமான நிலையத்தில் காமராஜர், அண்ணா பெயர்ப் பலகைகள் மீண்டும் பொருத்தப்படுமாம்!

வைகோ கேட்ட பிறகு ஒன்றிய அமைச்சர் தகவல்

சென்னை,ஜூலை 31- .தி.மு.. பொதுச்செயலாளர் வைகோ கடந்த வாரம் டில்லியில் ஒன்றிய விமான போக்கு வரத்துத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை சந்தித்தார்.

அப்போது அவரிடம், சென்னை விமான நிலையத்திலிருந்து அகற்றப்பட்ட, அண்ணா, காமராஜர் பெயர்ப் பலகைகளை மீண்டும் அதே இடங்களில் வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்திருந்தார்.

இதற்கு ஜோதிர் ஆதித்யா சிந்தியா விளக்கம் அளித்து வைகோவிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

சென்னை விமான நிலையத்தைப் புதுப்பிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றவுடன், காமராஜர் உள்நாட்டு முனையம் என்ற பெயர்ப்பலகை மீண்டும் பொருத்தப்படும். அதேபோல், கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றவுடன், அண்ணா பன்னாட்டு முனையம் என்ற பெயர்ப்பலகையும் மீண்டும் அதே இடத்தில் பொருத்தப்படும்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்பவருக்கு ரூ.3 கோடி பரிசு

இந்திய ரயில்வே அறிவிப்பு

புதுடில்லி, ஜூலை 31 ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்பவருக்கு ரூ.3 கோடி பரிசு வழங்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்து உள்ளது.

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட வீரர்களில் 25 பேர் (20%) ரயில்வே துறை ஊழியர்கள்.  அவர்கள் பதக்கம் வென்றால் பரிசுத்தொகை வழங்கப்படும் என இந்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்திய ரயில்வே துறையை சார்ந்த விளையாட்டு வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றால் அவர்களுக்கு ரூ.3 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இதுபற்றிய அறிவிப்பில், விளையாட்டு வீரர்களின் கனவான ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களில் ரயில்வே துறையை சார்ந்தவர்கள் தங்கம் வென்றால் ரூ.3 கோடி, வெள்ளி வென்றால் ரூ.2 கோடி, வெண்கலத்திற்கு ரூ.1 கோடி என்ற அளவில் பரிசு தொகை அளிக்க இருக்கிறோம்.

போட்டியில் இறுதிச்சுற்று வரை செல்லும் வீரர்களுக்கு ரூ.35 லட்சம், போட்டியில் கலந்து கொண்டாலே ரூ.7.5 லட்சம் வழங்கப்படும் என்றும் தங்கப்பதக்கம் வென்ற வீரரின் பயிற்சியாளருக்கு ரூ.25 லட்சம், வெள்ளிப்பதக்கம் வென்றவரின் பயிற்சியாளருக்கு ரூ.20 லட்சம் மற்றும் வெண்கலப்பதக்கம் பெற்றவரின் பயிற்சியாளருக்கு ரூ.15 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்திருக்கிறது.

No comments:

Post a Comment