ஒன்றிய அரசின் தவறான முடிவுகளால் 2 ஆவது அலையில் 50 லட்சம் பேர் உயிரிழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 22, 2021

ஒன்றிய அரசின் தவறான முடிவுகளால் 2 ஆவது அலையில் 50 லட்சம் பேர் உயிரிழப்பு

 ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடில்லி, ஜூலை 22 இந்தியாவில் கரோனாவால் இதுவரை 4.18 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாக அரசின் அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவில் கரோனா வால் இதுவரை 4.18 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாக அரசின் அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன. ஆனால் கரோனா உயிரிழப்புகள் அதிகமாக இருக்கலாம் என ஆய்வு முடிவு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறது.

இந்த தகவலை சுட்டிக்காட்டி மத்திய அரசை ராகுல் காந்தி நேற்று (21.7.2021) கடுமையாக சாடியிருந்தார். இது தொடர்பாக அவர் தனது சுட்டுரை தளத்தில், ‘‘உண்மை. ஒன்றிய அரசின் தவறான முடிவுகளால் கரோனா 2 ஆவது அலையில் நமது சகோதரிகள், சகோதரர்கள், தாய்மார்கள், தந்தைமார்கள் என 50 லட்சம் பேர் கொல்லப்பட்டு உள்ளனர்'' என்று குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் கரோனா உயிரிழப்புகள் குறித்த அந்த ஆய்வு முடிவையும் அவர் தனது சுட்டுரை பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

No comments:

Post a Comment