இரண்டாம் கட்ட அகழ்வாய்வில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 1, 2021

இரண்டாம் கட்ட அகழ்வாய்வில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு

தூத்துக்குடி, ஜூலை 1- சிவகளையில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணியில்  ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது.  தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் கடந்த 26.2.2021 அன்று ஆதிச்சநல்லூர், சிவகளையில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணியும், கொற்கையில் முதல் கட்ட அகழாய்வு பணியும் துவங்கியது. இந்த பணி யானது தொடர்ந்து 4 மாத காலமாக நடைபெற்று வருகிறது. சிவகளை அகழாய்வு பணி அகழாய்வு இயக்குநர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வு பணிக்காக 15க்கும் மேற்பட்ட குழிகள் அமைக் கப்பட்டு 40க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த அகழாய்வு பணியில் ஈடுபட்டுள் ளனர். சிவகளை அகழாய்வு பணியை பொறுத்தவரை 40க்கும் மேற்பட்ட முது மக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்தநிலையில் சிவகளை பரம்பு பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள்கண்டுபிடிக்கப்பட்டு ள்ளது. இந்த முதுமக் கள் தாழிகளில் 5 முதுமக்கள் தாழிகள் மூடியுடன் உள்ளது. 10 முதுமக்கள் தாழிகள் பெரிய அளவில் பிரம்மாண்டமாக உள்ளது. ஒவ்வொரு முது மக்கள் தாழியும் 2 அடி முதல் 4 அடி வரை உயரமாக காணப்படுகிறது.  

மேலும் பானைகளும், பானை ஓடுகளும், தமிழ் பிராமி எழுத்துக்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. சிவ களை அகழாய்வு பணியில் தாமிரபரணிக்கரை நாகரீ கத்தை கண்டறிவதற்காக முதல் முறையாக வாழ்விடப் பகுதிகளையும் ஆய்வு செய்து வருவது குறிப்பிடத் தக்கது. இதனால் அகழாய்வு அதிகாரிகளும், ஆர்வலர் களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment