‘தினமலர்' பார்வையில் யூதர்களும் - பார்ப்பனர்களும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 12, 2021

‘தினமலர்' பார்வையில் யூதர்களும் - பார்ப்பனர்களும்!

தினமலர்' என்னும் சங்பரிவார் - பார்ப்பன ஏட்டில், ‘‘யூதர்களும் பிராமணரும்!'' எனும் தலைப்பில் ஆசிரியருக்குக் கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது. பொய்யும், புனை சுருட்டும் கொண்டு இந்த 2021 ஆம் ஆண்டிலும் அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு இக்கடிதம் - 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பதற்கான எடுத்துக்காட்டு.

அக்கடிதம் இதோ:

‘‘ஜெர்மனில், ஹிட்லர் செய்த யூத ஒழிப்புக்கு சிறிதும் குறைவில்லாதது, தமிழகத்தில் பிராமணர் ஒழிப்பு.

எந்த ஓர் இனத்தையும் தவறாகப் பேசுதல், தாக்குவது இந்திய சட்டப்படி குற்றம், ஆனால், ஆட்சியில் இருப்போரே, அந்தக் குற்றத்தைச் செய்கின்றனர்.

பார்ப்பனர்' என்பதே, அந்த சமூகத்தினரை இழிவுபடுத்தும் சொல்தான். ஆனால், சிறுபான்மை இனமான அவர்கள், அந்த சொல்லுக்குக் கூட எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஒதுங்கி, ஒடுங்கி இருக்கின்றனர்.

அவர்களை காக்கும் கடமையில் உள்ள ஹிந்துக்கள், பல கூறாக பிரிந்து, திராவிட மாயையின் பிடியில் சிக்கி உள்ளனர்.

கிறிஸ்துவ, முஸ்லிம்களுக்கு ஆதரவாக களமிறங்கும் அமைப்புகள், பிராமணர்களுக்காக போராடுவதில்லை.

காலம் காலமாக, நம் நாட்டின் ஹிந்து கலாச்சாரத்தைக் காப்பற்றி வருவது, பிராமணர்கள்தான்.

அவர்களை மன்னர்கள் பாதுகாத்து வந்தனர். இப்போதுள்ள ஜனநாயக ஆட்சியாளர்கள், அவர்களை ஒழிப்பதில் தீவிரமாக உள்ளனர்.

கவுரவமாக வாழ்ந்த பிராமணர்கள், 70 ஆண்டுகளாக அனைத்து வகையான துன்பங்களையும் அனுபவித்து வருகின் றனர். சினிமா முதல் அனைத்து இடங்களிலும், பிராமண பெண்கள் கிண்டல் செய்யப்படுகின்றனர்.

சர்வாதிகாரி ஹிட்லர், யூத வெறுப்பை முன்னிறுத்தி, தன் மக்களை முட்டாள்தனமாக நம்ப வைத்து கொடுங்கோல் ஆட்சி நடத்தினார்.

அது போல திராவிட ஆட்சியாளர்கள், தமிழக மக்களை திசை திருப்ப, பிராமண எதிர்ப்பை நீண்ட ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகின்றனர்.

ஆட்சிக்கு எதிராக கலவரம் செய்தனர், கூலிக்கு கொலை செய்தனர், கொள்ளை அடித்தனர் என, பிராமணர்கள் மீது இதுவரை எந்தக் குற்றச்சாட்டாவது உண்டா?

பிராமணர்கள், நாட்டுப்பற்று மிக்கோர்; சிறந்த கல்வியறிவு பெற்றவர்கள்; கடவுள்மீது நம்பிக்கை உடையோர், ஆனாலும், அவர்கள் பல வழிகளில் அவமானப்படுத்தப்படுகின்றனர்.

ஓர் இனத்திற்கு எதிராக நடக்கும் நீண்ட கால சதியை, யாராவது தடுத்து நிறுத்த முன்வாருங்கள்.''

இவ்வாறு 'தினமலரின்' அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

யூதர்களோடு பார்ப்பனர்கள் தங்களை இணைத்துக் கொண்டது ஒரு வகையில் சரிதான்.

யூதர்கள் யார்?

அய்ரோப்பா முழுவதும் பரவி நேர்மையற்ற தொழில்களால் தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டவர்கள். வட்டிக்கடை, நிலங்கள் அபகரிப்பு, நிதி பரிமாற்றத்தில் மோசடி - இவற்றில் கைதேர்ந்தவர்கள்.

இப்பொழுதுகூடஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டியது' என்று சொல்லுவதுபோல' ஒண்டிக்குடித்தனம் நடத்த வந்த யூதர்கள், தனி நாட்டை உருவாக்கிக் கொண்டு பாலஸ்தீனர்களைப் படாதபாடு படுத்திக் கொண்டுதானே இருக்கிறார்கள்.

பார்ப்பனர்களைப் போலவே யூதர்களும் தங்கள் பிறவி தெய்வீகத் தன்மை கொண்டது என்ற இறுமாப்புக் கொண்டவர்கள் தாம்.

இந்தியப் பிரதமர் ஒருவர் இசுரேலுக்குச் சென்றது என்பது நரேந்திர மோடிதான்.

மாலேகான் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட சிறீகாந்த் புரோகித் இந்தியாவில் குண்டு வெடிப்புகளை நடத்தக்கூடிய இரகசிய கூட்டங்களில் எல்லாம் யூதர்களின் இஸ்ரேல் நாட்டின் உதவியைத் தான் நாடினர். மாலேகான் குண்டுவெடிப்பில் இசுரேலுடன் சங் பரிவார்களுக்கு இருந்த தொடர்பு, ஆவணங்களை எல்லாம் மாலேகான் குண்டுவெடிப்புத் தொடர்பான விசாரணையை நுணுக்கமாக விசாரித்த ஹேமந்த் கார்கரே குழுவினர் கண்டுபிடித்ததுண்டே!

அதனால்தான் பார்ப்பனர்கள் யூதர்களைத் தங்களோடு இணைத்துக் கொண்டு பேசுகிறார்கள்.

தினமலர்' கடிதத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள் எல்லாம் உண் மையா? பார்ப்பனர்கள் பாதிக்கப்பட்ட நிலையிலா இருக்கிறார்கள்?

இந்திய மக்கள் தொகையில் வெறும் 5 விழுக்காடே உள்ள பார்ப்பனர்கள், நாடாளுமன்ற மக்களவையில் 48%; மாநிலங்களவையில் 36% ஆளுநர்கள் 50% கேபினெட் செயலாளர்கள் 33% அமைச்சர்களின் செயலாளர்கள் 54% இந்திய ஒன்றிய தலைமைச் செயலாளர்கள் 62% அரசியலில் 58.7% பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள் 51% உச்சநீதிமன்ற நீதிபதிகள் 50% பொதுத் துறை நிறுவனங்களில் 57% அய்..எஸ். 72% அய்.பி.எஸ்.61% இத்தியாதி, இத்தியாதி என்ற நிலைதான்.

இன்றைக்கும் சமத்துவ சம நிலைக்கு வரத் தயாராக இல்லையே! பூணூல் அணிவதன் தத்துவம் என்ன? ‘‘நாங்கள் இரு பிறவியாளர்கள்!'' (துவிஜாதி) என்ற இறுமாப்புதானே! சங்கர மடத்தில் ஒரு குமாஸ்தா பணிக்கு ஒரு பார்ப்பனர் அல்லாதார் அமர்த்தப்படும் நிலை உண்டா?

சுப்பிரமணிய சாமி சங்கர மடம் சென்றால் சங்கராச்சாரியார் பக்கத்தில் சரி ஆசனம். மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் சென்றால் தரையில் உட்கார வேண்டிய நிலைதானே!

தினமலர்'கள் யாருக்காகப் பேசுகின்றன என்பதைப் புரிந்து கொள்வீர்!

பார்ப்பனரை பார்ப்பனர் என்று அழைக்காமல், ‘பிராமணர்' என்று அழைக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பதின் நோக்கம் என்ன? பார்ப்பனரைபிராமணர்' என்று அழைத்து, பார்ப்பனரல்லாதார்சூத்திரர்' (வேசி மக்கள்) ஆகவேண்டும் என்று இந்த 2021 இலும் எதிர்பார்க்கிறார்களா?

சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி' என்று சுயமரியாதை இயக்கம் கொடுத்த தன்மானக் குரலின் அடிப்படை இதுதான்!

No comments:

Post a Comment